எம்ஜிஆருக்கு பிறகு கட்சியில் சேர்ந்த கடைக்குட்டிகளுக்கு மாண்பு இல்லாதது சோகமே- கமல் கண்டனம்
எம்ஜிஆருக்கு பிறகு கட்சியில் சேர்ந்த கடைக்குட்டிகளுக்கு மாண்பு இல்லாதது சோகமே என்று கமல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்காதது குறித்து கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கருணாநிதிக்கு மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகில் இடம் ஒதுக்க கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் அங்கு இடம் ஒதுக்க சட்டசிக்கல்கள் உள்ளதால் அவருக்கு காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தமிழக அரசின் இச்செயலுக்கு ரஜினி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் கமலும் தற்போது கண்டனம் தெரிவித்துள்ளார்.
— Kamal Haasan (@ikamalhaasan) August 7, 2018
இதுகுறித்து அவர் டுவிட்டரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அண்ணா இருந்த போது கழகம் வளர்த்த இரு தம்பிகள் கருணாநிதியும் எம்ஜிஆரும். அவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் வைத்து மரியாதை செய்வதே மாண்பு. எம்ஜிஆருக்குப் பிறகு கட்சியில் சேர்ந்த கடைக்குட்டிகளுக்கு மாண்பு இல்லாதது சோகமே. எம்ஜிஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால் கண்டிப்பாய் அண்ணாவின் தம்பியை அவரருகில் கிடத்தியிருப்பார் என்று கமல் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications