திருச்சியில் கமல் கட்சி பொதுக் கூட்டம்: காவிரி குறித்து முக்கிய அறிவிப்பு இருக்குமா?
திருச்சியில் கமல் கட்சியின் பொதுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
Recommended Video

திருச்சி: திருச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி பொதுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் காவிரி விவகாரம் குறித்து அவர் ஏதேனும் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசன் கடந்த மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். அதையடுத்து இன்று திருச்சியில் முதல் பொதுக் கூட்டத்தை நடத்துகிறார். திருச்சியில் காவிரிக்காக விமான நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தியதை அடுத்து திருச்சியில் அனுமதியின்றி நடத்தப்படும் போராட்டம், பொதுக் கூட்டம் நடத்த ஏப். 18-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் கமல்ஹாசனின் பொதுக் கூட்டத்துக்கு முறையாக அனுமதி பெறப்பட்டுவிட்டதால் அவரது கூட்டத்துக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள நேற்று மதியம் கமல் ரயில் மூலம் திருச்சி சென்றார்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்த கமலிடம் காவிரிக்காக மக்கள் நீதி மய்யம் சார்பில் போராட்டம் நடைபெறுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு கமல், இதுகுறித்து திருச்சி பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றார். எனவே இன்றைய தினம் மத்திய , மாநில அரசுகளுக்கு எதிராக கடும் விமர்சனங்களை கமல் முன்வைப்பார் என்றும் காவிரி குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications