பிரதமர் நரேந்திர மோடி - கமல்ஹாசன் சந்திப்பு திடீர் ரத்து !!
கோவை: கோவை வந்த பிரதமர் மோடியை, நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் அனுமதி கிடைக்காததால் அந்த சந்திப்பு திடீரென ரத்தாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கோவை வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நகரமே காவல்துறை வசமாகி இருந்தது. மோடியை வரவேற்க கையில் தாமரையுடன் சென்றுள்ளார் மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

கோவை கொடிசியா மைதானத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவைக்கு வருகை தரும் மோடியை வரவேற்க சிறப்பான வரவேற்புகள் செய்யப்பட்டுள்ளது. மோடியின் பேச்சை கேட்க தமிழகம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் இங்கு வந்து உள்ளனர்.
பொதுக்கூட்டத்துக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவை வரும் பிரதமர் மோடியை தொழில் துறையினர், இலக்கிய துறையினர், திரைப்பட துறையினர் சந்தித்து பேசுகிறார்கள் என்று கூறினார். மேலும் அவர், இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்கிறார். மேலும் பா.ஜனதா பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு தமிழக அரசோடு ஒன்றிணைந்து செயல்படும் என்றார்.
இதனிடையே கோவை வரும் மோடி தனியார் ஹோட்டலி்ல் ஓய்வு எடுக்க உள்ளார். அப்போது மோடியை, நடிகர் கமல்ஹாசன் சந்தி்க்க நேரம் கேட்டிருப்பதாகவும், அதற்கு மோடி ஒத்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதராக கமல்ஹாசன் உள்ள நிலையில், மோடியுடனான கமல் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென இறுதியில் அனுமதி கிடைக்காததால் சந்திப்பு நடைபெறவில்லை.
-
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications