கமல் நாகரீகமாகக் கேள்வி கேட்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் அட்வைஸ்: வீடியோ
தமிழக அரசிடம் நடிகர் கமல் நாகரீகமாகக் கேள்விகளைக் கேட்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
மதுரை: நடிகர் கமல் நாகரீகமாக கேள்வி கேட்க வேண்டும். பதில் சொல்கிறவர்களும் நாகரீமாக பதில் சொல்ல வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் கமல் பேசிய சர்ச்சை பேச்சு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
Recommended Video

அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர் செல்வம், ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பேசும் உரிமையும் கேள்வி கேட்கும் உரிமையும் உள்ளது.
கமல் நாகரீகமாகக் கேள்விகளைக் கேட்க வேண்டும். பதில் சொல்கிறவர்களும் நாகரீகமாகப் பதில் சொல்ல வேண்டும் என அறிவுறுத்தும் வகையில் பதில் அளித்தார்.
மேலும், கமலை 'அவன்' என ஒருமையில் விளித்தார்கள். அதற்கு கமலும் தன் டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர்களை 'கல்லுளி மங்கர்' எனவும் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜாவை 'எலும்பு வல்லுநர்' என குறிப்பிட்டு எழுதியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.












Click it and Unblock the Notifications