உடல்நிலை சரியாக இருந்தால் என் கட்சியில் சேர்ந்திருப்பேன் என்றார் சேஷன்... கமல் பெருமிதம்!

சென்னை : உடல்நிலை சரியாக இருந்திருந்தால் எனது கட்சியில் சேர்ந்திருப்பேன் என்று சேஷன் தெரிவித்ததாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மேலும் எதை செய்தாலும் அறத்துடன் செய்ய வேண்டும் என்று சேஷன் அறிவுறுத்தியதாகவும் கமல் தெரிவித்தார்.
அடுத்த வாரத்தில் தனது புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ள நடிகர் கமல்ஹாசன், முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை இன்று சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சேஷனை கமல் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்குப் பிறகு கமல் கூறியதாவது :

எது செய்தாலும் அறம் வேண்டும் என்று சேஷன் அறிவுரை கூறினார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் உடல்நிலை சரியாக இருந்தால் அவரே என்னுடை கட்சியில் சேர்ந்திருப்பேன் என்றார். சேஷனின் இந்த பேச்சு ஊக்கம் அளிப்பதால் நன்றி தெரிவித்தேன். கட்சி தொடர்பாக சந்தேகம் இருந்தால் சந்திக்கலாமா என்று கேட்டேன்.
எப்போது வேண்டுமானாலும் அவரை சந்திக்கலாம் என்று சொன்னார். கட்சி பதிவு குறித்தெல்லாம் அவரிடம் பேசவில்லை, அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் நலம் விசாரித்தேன். பிப்ரவரி 21ல் நிச்சயம் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என்றும் கமல் தெரிவித்தார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!