நிலவேம்பு கசாயம் கொடுப்பதை நற்பணி இயக்கத்தினர் நிறுத்துங்கள்.. கமல் திடீர் கோரிக்கை
சென்னை: நற்பணி இயக்கத்தினர் நிலவேம்பு கசாயம் கொடுப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கமல் கோரிக்கை விடுத்துள்ளார்.

சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்
— Kamal Haasan (@ikamalhaasan) October 18, 2017
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டுகள்: சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்.
ஆராய்ச்சி அலோபதியார்தான் செய்யவேண்டுமென்றில்லை பாரம்பரியக காவலர்களே செய்திருக்கவேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான்
— Kamal Haasan (@ikamalhaasan) October 18, 2017
ஆராய்ச்சி அலோபதியார்தான் செய்யவேண்டுமென்றில்லை பாரம்பரியக காவலர்களே செய்திருக்கவேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நிலவேம்பு சாப்பிடுவதால் பக்க விளைவு ஏற்படுவதாக தகவல் பரவி வரும் நிலையில், இவ்வாறு வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கமல் நிலவேம்பு கசாய வினியோகத்தை தற்காலிகமாக நிறுத்தம் செய்ய கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications