சுவிஸ் வங்கியில் பணம் போட மாட்டேன்.. இருக்கும் பணத்தை மீ்ட்பேன்.. கமல் அதிரடி!

சுவிஸ் வங்கியில் பணத்தை போடமாட்டேன், அதனை மீட்க முயற்சிப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : சுவிஸ் வங்கியில் இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்க முயற்சிப்பேன், சுவிஸ் வங்கியில் பணத்தை போடமாட்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

சென்னை கேளம்பாக்கத்தில் நற்பணி இயக்கத்தினரை நடிகர் கமல்ஹாசன் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பிற்குப் பின்னர் அவர் ரசிகர்கள் மத்தியில் உற்சாகமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

Kamalhaasan also takes attention to black money deposited at Swiss bank

நவம்பர் 7 தன்னுடைய பிறந்தநாளில் ரசிகர்கள் கேக் வெட்ட வேண்டிய நேரம் இல்லை. அதற்கு மாறாக கால்வாய் வெட்ட வேண்டிய நேரம் இது. எனக்கான பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து மக்களுக்காக பணியாற்றுங்கள்.

நான் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி. கட்சி தொடங்குவதற்கான முதற்கட்ட தொடக்கம் தான் செயலி. அரசியல் கட்சி தொடங்குவதற்கு பணம் இல்லை என்று கவலை இல்லை. கட்சி தொடங்க பணம் தேவை என்றால் அதைக் கொடுக்க ரசிகர்கள் தயாராக உள்ளனர். ரசிகர்கள் வழங்கும் பணத்திற்கு கணக்கு வைக்க செயலி பயன்படும்.

சுவிஸ் வங்கியில் இருக்கும் பணத்தை மீட்க முயற்சிப்பேன், பணத்தை சுவிஸ் வங்கியில் போடமாட்டேன். இது தொடக்க கூட்டம் தான், இன்னும் 50 கூட்டங்களை இது போல நடத்த வேண்டும் என்றும் கமல்ஹாசன் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+