வேடிக்கை பார்த்தது போதும் பொங்கி எழுங்கள் என கமல் அழைப்பு!
தமிழகத்தில் வேடிக்கை பார்ப்பவர்களே அதிகம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் வேடிக்கை பார்ப்பவர்களே அதிகம், வேடிக்கை பார்த்தது போதும் பொங்கி எழுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது : சில சாலைகளில் மின்சாரம் அபாயம் என்று பெயர்ப்பலகை வைத்திருப்பதை பார்த்திருப்போம். அந்த மாதிரி தமிழ்நாட்டுக்கே போர்டு வைக்கலாம் என்றால் பார்வையாளர்கள் அபாயம் என்று பலகை வைக்கலாம். நம் நாட்டில் வேடிக்கை மனிதர்களை விட வேடிக்கை பார்க்கும் மனிதர்களே ஏராளம்.

எது எப்படி போனால் என்ன அப்படின்னு பார்த்துக்கொண்டே இருக்க பழகிவிட்டோம். பழகிவிட்டோம் என்றால் என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்.
நானும் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருந்தேன், முடியவில்லை. பார்த்தது போதும் பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர அழைப்பு விடுத்த கமல் அடுத்த கட்டமாக மக்களைப் பார்த்து வேடிக்கை பார்த்தது போதும் பொங்கி எழுங்கள் என்று இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Let’s rise to the occasion! #MakkalNeedhiMaiam #maiam #JoinMNM https://t.co/USv1tbAHCN
— Kamal Haasan (@ikamalhaasan) February 24, 2018
-
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications