கஜானாவை நோக்கியல்ல மக்களின் முன்னேற்றத்தை நோக்கிய பயணம்... ரசிர்கர்கள் மத்தியில் கமல் பேச்சு!
மற்றவர்களைப் போல கஜானாவை நோக்கி பயணிக்காமல் மக்களின் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கிறோம், அது நமக்கு நிச்சயம் வெற்றியைத் தரும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : மற்றவர்களைப் போல கஜானாவை நோக்கி பயணிக்காமல் மக்களின் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கிறோம், அது நமக்கு நிச்சயம் வெற்றியைத் தரும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ரசிர்களுடனான சந்திப்பிற்கு பின்னர் ரசிகர்கள் மத்தியில் கமல் பேசியதாவது : சிவகாசி, தேனி,ராசிபுரம், தஞ்சாவூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் வந்திருக்கும் எனது குடும்பத்தாருக்கு நன்றி. இதற்கு முன்னர் அடிக்கடி நாம் கூடி பேசி இருந்தாலும், இன்ற சற்றே இலக்கு மாறி கூடி இருக்கிறோம்.
லட்சியம் என்பது ஒன்று தான் மக்களை நோக்கிய ஒரு பயணம் தான் இது. இந்தப் பயணத்தை தொடங்கி நீண்ட நாட்களாகிறது, 37 வருடங்களாக எங்களுக்கு என்ன கிடைக்கும் என்று கேட்காமல் என்னுடன் பயணம் செய்தவர்கள் நீங்கள்.

மக்களின் முன்னேற்றத்தை நோக்கி
இப்போது எதை நோக்கி போகிறோம் என்று பதற்றப்படுவோருக்காக சொல்கிறேன்,நாம் வெற்றியை நோக்கி செல்கிறோம். அது எப்படி வெற்றி என்று சொல்லலாம் கர்வம் இல்லையா என்று கேட்கலாம். கர்வம் இல்லை இதில் அவையடக்கம் இருக்கிறது. நம்முடைய இலக்கு என்பது மற்றவர்களைப் போல கஜானாவை நோக்கியல்ல, மக்களின் முன்னேற்றத்தை நோக்கி. அது சிறந்த அளவில் இருக்க வேண்டும் என்பதே நமது பயணம்.

எந்த கட்சி என கேட்பேன்
நம் வெற்றி மிக நீளமானது அதே போன்ற நம் பாதையும் நீளமானது தான். இதற்கு முன் நடந்த கூட்டங்களில் கூட உங்கள் சாதி என்ன மதம் என்ன என்ற கேள்வி எழுந்ததே கிடையாது, இனியும் அப்படித் தான் இருக்கும். ஆனால் இதற்கு முன்னர் நீங்கள் எந்த கட்சி என்று நான் கேட்டது கிடையாது, இனி கேட்பேன்.

கட்டுப்பாடு அவசியம்
உங்களுக்கு சொல்லும் ஒரே ஒரு அறிவுரை இந்த கூட்டத்தில் இன்னும் பலர் வந்து சேர இருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் மூத்தவர்கள் நீங்கள், வந்து சேருவோரின் வயது என்னவாக இருந்தாலும் நீங்கள் மூத்தவர்கள் தான். அந்த பெருந்தன்மை, கண்ணியத்துடன் நீங்கள் செயல்பட வேண்டும்.
நாம் ஏற்கனவே நல்லது செய்த போது பாராட்டப்பட்டோம், கவனிக்கப்பட்டோம். இப்போது நீங்கள் என்ன செய்தாலும் கவனிப்பார்கள், ஆக நீங்கள் செய்வது கண்ணியமான கட்டுப்பாடான செயல்களாக இருக்க வேண்டும்

வெறித்தன கோஷம் அவசியமில்லை
உங்களுடைய கோஷங்கள் வெறித்தனமாக இருக்க வேண்டிய அவசியமில்லை, பிதற்றலான போஸ்டர்களையெல்லாம் ஒட்டாதீர்கள்.
அதில் இடம்பெறும் வாசகங்கள் கூட மேலிடத்தில் அனுமதி பெற்று அதன் பின்னர் தான் இடம் பெற வேண்டும். நாம் பயன்படுத்தும் வாசகங்கள் கூட கண்ணியமானதாக இருக்க வேண்டும், அதுவே உங்களை வித்தியாசப்படுத்தி காட்டும். அதற்கான அறிவுரையாகவும் இதனை சொல்கிறேன்.

ராமநாதபுரத்தில் தொடங்குகிறது
நமக்கு விரோதிகள் என்பவர்கள் சமூகத்திற்கும் விரோதிகள் தான். எனவே நாம் யாரையும் தேவையின்றி சாட வேண்டிய தேவையில்லை, இனி மக்களை நோக்கி செல்லும் இந்த பயணம் விரைவாகவும் நல்லபடியாகவும் சீக்கிரமும் நடக்க வேண்டும் என எண்ணுகிறேன். அதற்கான எல்லா ஏற்பாடுகளும் ராமநாதபுரத்தில் நடக்க இருக்கிறது.

ஆதரவை தர வேண்டும்
மதுரை, சிவகங்கையில் நடக்க இருக்கும் சுற்றுப்பயணத்தில் நீங்கள் அங்கே வர வேண்டும். மற்ற மாவட்டங்களுக்கு வரும் போது அங்கும் வந்து நீங்கள் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம்












Click it and Unblock the Notifications