காமராஜரை தோற்கடித்த மண்.. விருதுநகர் ஊர்காரர்கள் என சொல்ல வெட்கமாக உள்ளது.. பொதுமக்களின் குமுறல்
விருதுநகர்: பெருந்தலைவர், கிங் மேக்கர் என்று உலகமே போற்றும் காமராஜர் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி அவருடைய ஊர்காரர்களான விருதுநகரை சேர்ந்த மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
1967-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காமராஜர் பே. சீனிவாசன் என்பவரிடம் 1200 வாக்குகளில் தன்னுடைய வெற்றியை தவறவிட்டார்.

மக்கள் அந்த நேரத்தில் தலைமையின் மீது இருந்த வெறுப்பு காரணமாக இருந்தாலும் தற்போது உலகமே போற்றும் காமராஜரை அவருடைய சொந்த ஊரிலே தோற்கடித்து விட்டார்கள் என்ற ஒரு அவப்பெயரைத்தான் சுமந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் அது குறித்து தற்போதைய இளம் தலைமுறையினர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நாம் பேசுவதில் நம்மிடம் பல தகவல்களை பகிர்ந்து இருக்கின்றனர். அதை பார்க்கலாம்.

வெற்றி தோல்வி என்பது எப்போதும் யாருக்கும் நிரந்தரம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் இன்று உலகமே போற்றும் காமராஜருக்கு இந்த அனுபவம் அதிகமாகவே இருந்திருக்கும். ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த காமராஜர் ஒரு முதலமைச்சராக மட்டுமல்லாமல் இரண்டு பிரதமர்களையும் உருவாக்கிய மாமனிதன் தான். ஆனாலும் அவருக்கும் பல சறுக்கல்கள், ஏமாற்றங்கள் கிடைத்திருக்கிறது.
இன்று நம்முடைய சமுதாயத்தில் பலரும் அடிப்படைக் கல்விகளை எளிமையாக பெறுவதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர் தான் காமராஜர். தான் கற்காத கல்வியை என்னுடைய சந்ததிகள் கற்காமல் விடக்கூடாது என்று விடாப்பிடியாக பல முயற்சிகளை எடுத்ததால் விளைவாகவே இன்று அடிமட்டத்தில் இருப்பவர்களாலும் எளிமையாக கல்வியை கற்றுக் கொள்ள முடிகிறது.
அதே நேரத்தில் காமராஜரின் சொந்த ஊரான விருதுநகர் இப்போதும் காமராஜர் ஆசைப்பட்ட படியே தொடர்ச்சியாக பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் இடங்களை பிடித்து விடுகிறது. அது போல விருதுநகரில் கவர்ன்மென்ட் ஸ்கூலில் படித்தால் கூட அதிகமான மதிப்பெண்களை பெற்று விடலாம் என்ற ஒரு நிலை இப்போதும் நிலவி வருகிறது என்ற அளவிற்கு தற்போதைய நிலை இருந்தாலும் காமராஜர் தோல்வியை சந்தித்ததும் இதே ஊரில் தான்.
இந்த நிலையில் அப்போதைய சூழ்நிலையில் பல காரணங்களால் காமராஜர் தோற்கடிக்கப்பட்டார். ஆனால் இப்போதும் அவருடைய சொந்த ஊர் காரர்களே அவரை தோற்கடித்து விட்டார் என்ற ஒரு வரலாறு அழுத்தமாக இருக்க தான் செய்கிறது. அது குறித்து பலர் வருத்தங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் விருதுநகர் மாவட்ட, பனங்காட்டு படை கட்சியின் மாவட்ட செயலாளராக, இருக்கும் தாமரைக்கண்ணன் என்பவர், நம்மிடம் பேசும் போது இப்போதும் வெளியே நாங்கள் செல்லும் இடத்தில் எந்த ஊர் என்று கேட்கும் போது விருதுநகர் என்று சொல்லும் போது எங்களை ஒரு மாதிரி தான் சிலர் பார்க்கிறார்கள். காமராஜரையே நீங்க தோற்கடித்து விட்டீங்களே என்று இப்போதும் அந்த கேள்வியை எழுப்பாதவர்கள் இல்லை என்று சொல்லலாம் என்று கூறி இருக்கிறார்.
இன்னைக்கும் கூட அவருடைய பிறந்த நாளில் நாங்கள் பல மாணவ மாணவிகளின் படிப்பு செலவுகளுக்கும், படிப்புக்கான உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறோம். ஆனாலும் காமராஜரை தோற்கடித்து விட்டீர்கள் என்ற அவப்பெயரை சுமந்து கொண்டு தான் இருக்கிறோம் என்று வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார்.
அதேபோல விருதுநகரில் காமராஜருக்காக அவருடைய உருவ சிலை வைத்து கோவில் கட்டிய அவருடைய தீவிரமான பக்தரான கணேசன் என்பவர் பேசுகையில் காமராஜரை இந்த ஊர் தோற்கடித்ததால் தான் அவர் பெயர் வைத்து கட்டப்பட்ட பஸ்டாண்டு கிட்டதட்ட 20 வருடங்களுக்கு மேலாக மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் பல தடைகள் இருக்கிறது. அதனாலேயே பல பேருந்துகள் நகரத்திற்குள் வராமல் புறவழிச்சாலையில் சென்று விடுகிறது என்று வேதனையோடு கணேசன் பேசி இருக்கிறார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications