காமராசர் சிலையின் முகத்தில் அவமரியாதை.. தென்காசி அருகே பதட்டம்
தென்காசி:தென்காசி அருகே காமராஜர் சிலை அவமதிக்கப்பட்டது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
தென்காசி அருகே உள்ளது பெரியபிள்ளைவலசைக் கிராமம் இந்த ஊரின் நுழைவுப் பகுதியில் காமராஜர் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலையை நேற்றிரவு யாரோ சில மர்ம ஆசாமிகள் முகப்பகுதியில் மாட்டு சாணத்தை அப்பிவிட்டு சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை அப்பகுதிமக்கள் அங்குவந்தபோது சிலை அவமதிப்பு செய்யப்பட்டிருப்பத்துக் கண்டு காவல்துறைக்கும்,அப்பகுதி மக்களுக்கும் தகவல் சொல்லவே விஷயம் காட்டுத் தீயாய் பரவியது. ஏராளமான ஆண்களும், பெண்களும் சாலைக்குத் திரண்டுவந்து மறியலில் குதிக்க முயற்சித்தனர்.
செங்கோட்டை இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சிலையில் செய்யப்பட்டிருந்த அவமதிப்பை தண்ணீர் விட்டுக் கழுவினர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தால்தான் அங்கிருந்து செல்வதாக பொதுமக்கள் தெரிவிக்கவே காவல்துறைக்கும்,பொதுமக்களுக்கும் வாக்குவாதம் உருவானது.

தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அரவிந்தன் விரைந்து வந்து குற்றவாளிகளை கைதுசெயவதாக உறுதியளித்தும் பொதுமக்கள் மறுப்புதெரிவித்து செங்கோட்டை ரயில் நிலையம் சாலையில் மறியல் செய்ய திரண்டுவந்தனர்.

அவர்களை தென்காசி துணை கண்காணிப்பாளர் அரவிந்தன், தாசில்தார் சங்கர கோமதிநாயகம் ஆகியோர் சமாதானப்படுத்தி மறியல் திட்டத்தை கைவிடசெயது பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. கூட்டத்தினர் கலைந்து சென்றனர். இருப்பினும் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications