காஞ்சிபுரம் 'டான்' ஸ்ரீதரின் தம்பி செந்திலைத் தூக்கியது அமலாக்கப் பிரிவு!
காஞ்சிபுரம் டான் ஸ்ரீதர் தம்பி செந்தில் நேற்று இரவு சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகளால் காஞ்சிபுரத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை: காஞ்சிபுரம் டான் ஸ்ரீதரின் தம்பி செந்தில். நேற்றிரவு அவரை சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் காஞ்சிபுரத்தில் கைது செய்தனர். செந்திலை சென்னைக்கு அழைத்து வந்து உயர் அதிகாரிகளால் தனி அறையில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் அருகேயுள்ள திருப்பருத்திக்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர், ரியல் எஸ்டேட் தாதா. இவர் மீது காஞ்சிபுரம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்ட பஞ்சாயத்து, அடிதடி, செம்மர கட்டை கடத்தல் உள்பட 20க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஸ்ரீதர், காஞ்சிபுரம் ஒன்றிக்குழு துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார். ஐந்து முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் வெளியே வந்த ஸ்ரீதர், மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். அவரை போலீசார் தேடியபோது தலைமறைவாகிவிட்டார். இவரை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர்.
ஸ்ரீதர் அவரது மனைவி குமாரி ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் வெளிநாட்டில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த அவரது மனைவி குமாரியை, கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும், 80 சதவீதம் சொத்துக்கள் பெரும்பாலும், அவரது மனைவி குமாரியின் பெயரிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே ஸ்ரீதர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரைக் கைது செய்ய அமலாக்கத்துறை, இண்டர்போல் போலீசாரின் உதவியை நாட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் ஸ்ரீதரின் தம்பி செந்திலை கைது செய்துள்ளனர். செந்தில் பெயரில் பல கோடி ருபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும், அந்த சொத்துக்களை செந்தில் பங்கு பரிவர்த்தணை செய்ததாகவும், ஸ்ரீதர் கொள்ளையடித்த சொத்துக்கள் அனைத்தும் தனது தம்பி பெயரில் வைத்துள்ளதாகவும் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதை அடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications