கனிமொழி பேசாத திமுக மேடை...!
சென்னை: மிகவும் எழுச்சியுடன் நேற்று இரவு நடைபெற்ற திமுக மகளிர் மாநாட்டில் மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி மட்டும் பேசவில்லை. தைராய்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட காரணத்தால் அவர் நேற்றைய மாநாட்டின்போது பேசவில்லை.
மது விலக்குக்கு எதிராக மகளிர் மாநாட்டை நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகில் உள்ள கரசங்காலில் நடத்தியது திமுக. ஆயிரக்கணக்கில் பெண்கள் திரண்டு வந்து இதில் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, சுப்புலட்சுமி ஜெகதீசன், கவிஞர் சல்மா உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

துரைமுருகனின் பாசப் பேச்சு
மாநாட்டில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கனிமொழி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். கனிமொழி பிறந்து கண்ணைத் திறப்பதற்குள்ளாகவே அதைத் தனது கையில் ஏந்தி பாசத்துடன் பார்த்தவன் தான் என்பதை குறிப்பிட்டு அவர் சொன்னபோது கனிமொழி முகத்திலும் நெகிழ்ச்சி தெரிந்தது.

கனிமொழி பேசவில்லை
மாநாட்டில் கனிமொழி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பேசவில்லை. தைராய்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டுள்ளதால் அவர் பேசுவதைத் தவிர்த்து விட்டார். ஆனால் அனைவரும் கனிமொழியைப் பற்றிப் நிறையவே பேசினார்கள்.

வரவேற்ற காஞ்சனா.. நன்றி சொன்ன ஹெலன்
மாநாட்டில் மகளிர் அணித் தலைவி காஞ்சனா கமலநாதன் வரவேற்பு நிகழ்த்த, ஹெலன் டேவிட்சன் நன்றி நவின்றார்.

மாநாட்டு தீர்மானம்
மதுவிலக்கு கோரி தமிழகத்தில் நடைபெறும் மக்கள் இயக்கத்தை திசை திருப்புவதற்காக ஆளும் கட்சியினர் பல்வேறு குறுக்கு வழிகளை கையாண்டு வருகிறார்கள். தமிழ் மக்களின் எண்ண ஓட்டங்களையும், அதன் அடிப்படைகளையும் முறையாகவும், சரியாகவும் புரிந்து கொண்டு அ.தி.மு.க. அரசு உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட முன்வர வேண்டும் என்றும், அது குறித்து உரிய அறிவிப்பினை வரும் சட்டமன்ற கூட்ட தொடர் தொடங்கும்போதே அறிவித்து விட வேண்டும் என்றும், மதுவிலக்கு போராட்டங்கள் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்கள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக எந்த வித நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும், போராட்டங்களையொட்டி பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் மேல் நடவடிக்கை இன்றி திரும்ப பெற வேண்டும் என்றும் அதிமுக அரசை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications