ஆண்களே ரேஷன் கடைக்கு போங்க, அப்பதான் பெண்கள் படும்பாடு புரியும்: கனிமொழி
சேலம்: ஆண்களே ரேஷன் கடைக்கு செல்லுங்கள் அப்போது தான் பெண்கள் படும் கஷ்டம் புரியும் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் உமாராணி செல்வராஜுவுக்கு ஆதரவாக அக்கட்சியின் எம்.பி. கனிமொழி பிரச்சாரம் செய்தார்.

சேலம் முழுவதும் வாக்கு சேகரித்த அவர் தானாக பேசாமல் வாக்காளர்களிடம் கேள்விகள் கேட்டு வித்தியாசமாக பிரச்சாரம் செய்தார்.
ஜான்சன்பேட்டையில் பேசிய அவர் ஆண்கள் கூட்டத்தை பார்த்து ரேஷன் கடைகளில் எவ்வளவு மண்ணெண்ணெய் ஊற்றுகிறார்கள் என்று தெரியுமா? என்று கேட்டார். அதற்கு ஆண்கள் 5 லிட்டர் என்று பதில் அளித்தனர். அதே கேள்வியை அவர் பெண்கள் பக்கம் பார்த்து கேட்க அவர்களோ வெறும் இரண்டு லிட்டர் தான் கொடுக்கிறார்கள் என்றார்கள்.
ஆண்களே கொஞ்சம் ரேஷன் கடை பக்கம் செல்லுங்கள் அப்போது தான் பெண்களின் நிலைமை தெரியும், அவர்கள் படும் கஷ்டம் புரியும். இந்த ஆட்சியில் எதுவும் ஒழுங்காக கிடைப்பது இல்லை என்றார் கனிமொழி.
பின்னர் கன்னங்குறுச்சியில் பேசிய அவர் கூறுகையில்,
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடும், அருந்ததியர்கள், இஸ்லாமியர்களுக்கு உள்ஒதுக்கீடும் வழங்கியது நம் கலைஞர் தான். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுக்க அண்ணன் வீரபாண்டியார் பாடுபட்டார். அதனால் அனைவரும் நலம் பெற திமுகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications