பெருமையான தருணம்... இஸ்ரோ தலைவரான விஞ்ஞானி கே சிவனுக்கு டிடிவி தினகரன், கனிமொழி வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோவிற்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள சிவனுக்கு டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ., மற்றும் கனிமொழி எம்.பி., ஆகியோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இஸ்ரோ அமைப்பின் தலைவராக உள்ள ஏ.எஸ்.கிரண்குமாரின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து. அதன் புதிய தலைவராக திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக பணியாற்றி வரும் கே. சிவன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Kanimozhi and TTV Dhinakaran wishes New ISRO Chief Sivan

சிவன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சரக்கல்விளை கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஆர்.கே நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக டி.டி.வி. தினகரன் அவர்கள் ட்விட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டு உள்ளார். அதில், தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் கே சிவன் அவர்கள் இஸ்ரரோ தலைவராக பதவி ஏற்பது குறித்து எனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களுக்கு இது பெருமையான தருணம்! உங்களது சீரிய தலைமையில் இஸ்ரோ மேலும் பல பெருமைகளை அடையும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.

அதேபோல திமுகவை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., கனிமொழியும் சிவனுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'இஸ்ரோ'வின் புதிய தலைவராக தமிழரான திரு.சிவன் நியமிக்கப்பட்டுள்ளது தமிழர்களை பெருமிதம் கொள்ளச் செய்துள்ளது. நாட்டின் கவுரவம் வாய்ந்த பொறுப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இஸ்ரோ தலைவர் பதவியை வகிக்கவுள்ள முதல் தமிழர் சிவன். இவர் தலைமையில் இஸ்ரோ பல்வேறு சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kanimozhi and TTV Dhinakaran wishes New ISRO Chief. Sivan was appointed as the New Chief Director for Indian Space Research Organization for the next three years.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X