மிஞ்சிட்டாரே பாதிரியார்.. பீறிட்ட ஆபாசம்.. திடீர்னு மாயமான பெண்.. பாளையங்கோட்டையில் கதறும் பெனடிக்
கன்னியாகுமரி: 75க்கும் அதிகமான பெண்களுடன் பாதிரியார் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியாகிய சூழலில், இந்த வழக்கின் விசாரணை சூடுபிடித்து வருகிறது.
பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாக, பாதிரியார் பெனடிக் தொல்லை கொடுக்கும் வகையில் நடந்து கொண்டுள்ள நிலையில், முதல்முறையாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
அந்த மாணவி கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த 11-ம் தேதி புகார் தந்துள்ளார்.. அந்த பாலியல் புகாரின் அடிப்படையில்தான், நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் 14ம் தேதி பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

ஆபாச சேட்டிங்
இதற்கு நடுவில், பாதிரியார் மற்ற பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள், வாட்ஸ்அப் மெசேஜ்கள், ஸ்கிரீன்ஷாட்கள் என பலவும் வேக வேகமாக சோஷியல் மீடியாவில் பரவிவிடவும், அப்போதுதான், பாதிரியாரால் பாதிக்கப்பட்டது ஒரு பெண் மட்டுமே கிடையாது, ஏகப்பட்ட இளம் பெண்கள் சிக்கி உள்ளனர் என்பது தெரியவந்தது.. இணையத்தில் ஆபாச வீடியோக்கள் வெளியானதுமே, பாதிரியார் தலைமறைவாகிவிட்ட நிலையில், 2 தனிப்படை போலீசார் மூலம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டார். இவரிடம் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. முதல்கட்டமாக 10 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது. அந்த 10 மணி நேரத்தில் அவர் சொன்ன வாக்குமூலம்தான், மீடியாவில் 2 நாட்களாகவே கசிந்து கொண்டிருக்கின்றன.

30 பாதிரியார்கள்
அந்தவகையில், மேலும் 2 தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.. பெனடிக், 30 வாட்ஸ்அப் குரூப்களை வைத்திருக்கிறாராம்.. இவர்தான் அதற்கெல்லாம் அட்மினாகவும் இருந்திருக்கிறார்.. ஆபாச வீடியோக்கள், ஆபாச சாட்டிங், ஆபாச போட்டோக்கள் இவைகளை ஷேர் செய்வதற்காகவே அந்த 30 வாட்ஸ் அப் குரூப்களை பாதிரியார் பெனடிக் தொடங்கினாராம்.. தன்னுடன் பணியாற்றிய 30 பாதிரியார்கள் மற்றும் 5 பெண்கள் கொண்ட,வாட்ஸ் அப் குரூப்பை தொடங்கியிருக்கிறார்.. இந்த குரூப்பில், தான் எடுத்த ஆபாச வீடியோக்களையும், போட்டோக்களையும், இளம் பெண்களுடன் நடந்த சாட்டிங்குகள், போன்றவற்றை ஷேர் செய்தும் வந்துள்ளார்.. இவைகளை போலீசாரிடம், பாதிரியாரே வாக்குமூலமாக தந்துள்ளாராம்.

13 சிம்கார்டுகள்
அதுமட்டுமல்ல, தொலைதூரக் கல்வி மூலம் எம்ஏ. எம்பிஏ படித்திருக்கிறாராம் பெனடிக்.. மலையாளம் உள்ளிட்ட 3 மொழிகளை சரளமாக பேசுவாராம். மொத்தம் 13 சிம்கார்டுகள், 3 செல்போன்களை மாற்றி மாற்றி பயன்படுத்தி வந்திருக்கிறார்.. இவைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.. இந்த 13 சிம் கார்டுகளில் 6 சிம் கார்டுகள் கர்நாடக மாநிலத்தில் வாங்கப்பட்டவை என்று தெரியவந்துள்ளது.. ஆனால், இவற்றை யாரிடம் இருந்து வாங்கினார்? என்றும், பாதிரியாரிடம் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் என்ற விசாரணையும் இனிமேல்தான் போலீசார் துவங்க உள்ளனர்.

தேக்க நிலை
ஆனால், பாதிரியாரிடமிருந்து பறித்து செல்லப்பட்ட செல்போன் இன்னும் கிடைக்கவில்லை.. பாதிரியாரின் நண்பர்தான், செல்போனுடன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.. அவரை கைது செய்வதற்கு தனிப்படை அமைக்கப்பட்டு கேரளாவில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது... இதுவரை 75 ஆபாச படங்கள் வெளியானதாக சொல்கிறார்கள்.. ஆனால் அது யார் மூலம் வெளியானது என்பது கண்டுபிடிக்கப்பட வில்லை. இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு பெண் ஒருவர் ஆஜராக வேண்டிய நிலையில், அந்த பெண்ணும் விசாரணைக்கு இன்னும் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறாராம்..

முளைத்த பிரச்சனை
விசாரணைக்கு ஆஜராக வேண்டிய பெண் வராமல் இழுத்தடிப்பதால், விசாரணையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். எனவே, அவரையும் செல்போனையும் கண்டுபிடிப்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்... இதனிடையே, பாதிரியாரை இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதற்கான முயற்சியை போலீசார் கையாள்வதாகவும், பாதிரியார் தலைமுறைவாக இருந்தபோது அவருக்கு உதவி புரிந்த முக்கிய பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சோஷியல் மீடியாவில் யாரோ திடீரென கிளப்பிவிடவும், காவல்துறை கொந்தளித்துவிட்டது.. குமரி மாவட்ட எஸ்பி ஹரி கிரண் பிரசாத் இதுகுறித்து உடனடியாக ஒரு விளக்கம் தந்தார்..

செக்யூரிட்டி
"பாதிரியார் சம்பவத்தில் விசாரணை சரியான முறையில் நடத்தப்பட்டு வருகிறது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், வழக்கை திசை திருப்பும் விதத்தில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். பாதிரியாரை வரும் 4ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 2 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எஸ்பி ஹரிகிரண் பிரசாத் தெரிவித்துள்ளார்.. நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில், தனி ரூமில்தான், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ இருந்தார்... பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை, தனி ரூமில் வைத்துள்ளதாக கூறப்பட்டது.

பாதிரியார்
ஆனால், நாகர்கோவிலில் இருந்தால், தன்னுடைய நண்பர்கள், சொந்தக்காரர்கள் யாராவது சந்திக்க வரலாம் என்பதால், இதை தவிர்க்கும் வகையில், தன்னை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று பாதிரியார், போலீசில் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. எனவே, நேற்று மாலை, பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து, பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்... பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் நாகர்கோவில் சிறையில் இருந்து, பாளை சிறைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

சுழலும் சாட்டை
சமூகவலைதளங்களில் பரப்பியவர்களை பிடிக்க ஏடிஎஸ்பி ராஜேந்திரன் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களில் ஒரு பிரிவினர் தற்போது கேரளாவில் முகாமிட்டுள்ளனர். அதேபோல, வழக்கில் ஆஜராக வேண்டிய பெண்ணுக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளது.. இதனிடையே, இதனிடையே, வாட்ஸ் அப் சாட்டிங், வீடியோ, போட்டோக்களில் உள்ள அனைத்து இளம்பெண்களிடமும் விசாரணை நடத்தப்படும். போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அவர்களை அழைக்காமலேயே, நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே சென்று ரகசிய வாக்குமூலம் பெறப்படும் என்றும் போலீசார் சொல்லி இருக்கிறார்கள்.. இப்படி பாதிரியார் வழக்கு தொடர்பாக நாலாபக்கமும் குமரி போலீசார் சாட்டையை சுழட்டி கொண்டிருக்கிறார்கள்..!!
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications