கேரளாவுடன் இணைவோம்.. குமரி மக்களின் முழக்கம்.. அதிர்ச்சியில் தமிழக அரசு!
Recommended Video

சென்னை: எங்களை மதிக்காத தமிழக அரசு எங்களுக்கு வேண்டாம். நாங்கள் கேரளாவுடன் இணைவோம் என்று கன்னியாகுமரி மாவட்ட மக்கள் முழங்கியுள்ளது தமிழக அரசை அதிர வைத்துள்ளது.
கேரளாவில் உள்ள இடதுசாரி அரசு மிகத் தீவிரமாக ஓகி புயல் பாதிப்பு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் செயல்படும் விதம் ஒட்டுமொத்த இந்தியாவையும் கவர்ந்துள்ளது.
மீனவர்களை மீட்பதில் வேகம், கட்டுப்பாட்டு அறையில் போய் அமர்ந்து பணிகளை முடுக்கி விடுவது என பிரமாதப்படுத்தி வருகிறார் பினாராயி விஜயன். ஆனால் தமிழகத்தில் நிலைமை படு மோசமாக இருக்கிறது. தலைகீழாக உள்ளது. இங்கு முதல்வர் இதுவரை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரவில்லை.

மீனவ மக்களின் கொந்தளிப்பு
இது அந்த மாவட்ட மக்களை கடுமையாக கொந்தளிக்க வைத்துள்ளது. குழித்துறையில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. முதல்வர், அமைச்சர்கள் வரும் வரை போராட்டம் தொடரும் என மக்கள் அறிவித்து விட்டனர்.

ஜல்லிக்கட்டை விட உயர்ந்தது
ஏழை எளிய மக்களின், மீனவ சமுதாயத்தினரின் இந்த எழுச்சி மிக்க போராட்டம் தமிழகத்தை அதிர வைத்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட இது மிகவும் உயர்ந்தது என்பதில் சந்தேகமே இல்லை. காரணம் இது மக்கள் தங்களுக்காக நடத்தி வரும் போராட்டம்.

தமிழக அரசுக்கு மிகப் பெரிய அவமானம்
அதை விட இந்தப் போராட்டத்தின் முக்கிய அதிர்ச்சி முழக்கமாக, நாங்கள் கேரளாவுடன் இணைவோம் என்று மீனவ மக்கள் கூறியுள்ளதுதான். இது தமிழக அரசுக்கு மிகப் பெரிய அவமானமாகும். தமிழக அரசு முற்றிலும் செயலிழந்து போயுள்ளது என்பதையே இது காட்டுவதாக உள்ளது.

அபாரமாக செயல்படும் கேரளா
மீனவர்களை மீட்கவும், நிவாரணப் பணிகளிலும் கேரள அரசு மிகப் பெரிய அளவில் அக்கறை காட்டுகிறது. தீவிரம் காட்டுகிறது. ஆனால் தமிழகத்தில் இதுவரை எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குமரி மாவட்ட மீனவர்கள் குமுறியுள்ளனர். அடுத்த கட்டமாக குமரி மாவட்ட மீனவ கிராமங்களை கேரளாவுடன் இணைக்கக் கோரி நாங்கள் போராட்டத்தில் ஈடுபடப் போகிறோம் என்று அவர்கள் முழங்கியுள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
தமிழக அரசு உடனடியாக விழித்துக் கொள்ளாவிட்டால் மிகப் பெரிய மக்கள் புரட்சியை அது குமரியையும் தாண்டி எதிர்கொள்ள நேரிடலாம் என்பதே நிதர்சனம்.
-
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications