ஜோலார்பேட்டை அருகே குமரி- பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு 10 பேர் காயம்
வேலூர் : வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டை அருகே, கன்னியாகுமரியிலிருந்து பெங்களூரு செல்லும் ஐலேண்ட் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. ஆனாலும், 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கன்னியாகுமரியிலிருந்து நேற்று இரவு புறப்பட்ட ஐலேண்ட் விரைவு ரயில் திருவனந்தபுரம், கோவை, ஈரோடு, சேலம், திருப்பத்தூர் வழியாக பெங்களூரு செல்லும். இந்த ரயில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டையை அடுத்த பச்சியூர் என்ற இடத்தை கடந்தபோது, ரயிலின் எஸ்.6, எஸ்.7, எஸ்.8, எஸ்.9 உள்ளிட்ட 6 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

உயிர் தப்பிய பயணிகள்
எக்ஸ்பிரஸ் ரயில் 30 கி.மீ. வேகத்தில் மெதுவாக சென்றதால் இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் பிழைத்துள்ளனர். அதிகாலை நேரம் என்பதால், பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் சுமார் 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

பயணிகள் மீட்பு
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்களும், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரும், இடிபாடுகளுக்கு இடையே சிக்கி படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.
அவசர உதவி எண்கள்
விபத்து குறி்த்த விவரங்களை அறிய உதவி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சேலம் ரயில் நிலையம்: 0427-2431947 திருச்சூர் ரயில் நிலையம்: 0487-2430060 பாலக்காடு ரயில் நிலையம்: 044-2555231, 0491-2556198 திருவனந்தபுரம் ரயில் நிலையம்: 0471-2320012 ஆகிய எண்களில் விபத்து குறித்த விவரங்களை அறியலாம்.

ரயில் போக்குவரத்து பாதிப்பு
ரேணிகுண்டா-பெங்களூர் செல்லும் பதுல்பூர் விரைவு ரயில் ஜோலார்பேட்டையில் நிறுத்தப்பட்டு உள்ளது. சென்னை-பெங்களூரு செல்லும் பிருந்தாவன் டபுள் டெக்கர் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டு உள்ளது.பெங்களூரு-சென்னை வரும் லால்பாக் ரயில் ஜோலார்பேட்டையில் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த வழியாக இயக்கப்படும் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில்வே அமைச்சர் உத்தரவு
இதனிடையே ரயில் விபத்து குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ள மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு, சம்பவத்திற்கு காரணமானவர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
Kanyakumari-Bangaluru express news:MR @sureshppabhu directs immediate suspension of official responsible for mishap pic.twitter.com/oYTihJMf0O
— Ministry of Railways (@RailMinIndia) February 5, 2016
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications