கன்னியாகுமரி அதிமுகவில் புகைச்சல்... மாவட்ட செயலாளரை மாற்ற மனு கொடுத்த முன்னாள் அமைச்சர்
கன்னியாகுமரி மாவட்ட செயலாளரை மாற்றக்கோரி அ.திமு.க.தலைமைக்கழக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் பச்சைமால் தலைமையில் அ.தி.மு.கவினர் புகார் மனு அளித்துள்ளனர்.
சென்னை: கன்னியாகுமரி மாவட்ட செயலாளரை மாற்றக்கோரி முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால் தலைமையில் தலைமைக் கழகத்தில் ஏராளமான அ.திமு.க.வினர் புகார் மனு அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால் தலைமையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் வேன்களில் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை கழகத்துக்கு திரண்டு வந்தனர்.

அ.தி.மு.க. தொண்டர்களிடம் புகார் மனுக்கள் வாங்கிக் கொண்டிருந்த அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் அந்த மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் விஜயகுமார் மீது புகார் மனு கொடுத்தனர். இது பற்றி கூறிய முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால் கூறுகையில்,
கட்சியின் உண்மையான தொண்டர்களை இப்போதுள்ள மாவட்ட செயலாளர் மதிப்பதில்லை. மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர் பதவியை தி.மு.க.வினருக்கு அளிக்க அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார். இதனால் கட்சி தொண்டர்களிடையே அதிருப்தி நிலவுகிறது. எனவே மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்துள்ளோம்" என்றார். மேலும் அவர், இது தொடர்பாக நாளை காலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து மனு கொடுக்கப் போவதாக கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications