முதல்வரை நேரில் வரச்சொன்ன குமரி மாவட்ட மீனவர்கள்.. சந்திக்க ஏற்பாடு செய்வதாக கலெக்டர் அறிவிப்பு
நாகர்கோவில்: குமரி மாவட்ட மீனவ பிரதிநிதிகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் தெரிவித்தார்.
ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்று கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் மீனவர்கள் ஆயிரக்கணக்கில் போராட்டத்தில் குதித்தர். இதனால் 12 மணிநேரம் ரயில்வே போக்குவரத்தே பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், போராட்டக்காரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற கலெக்டர் சஜ்ஜன்சிங்கை மக்கள் ஒரு மணி நேரம் முற்றுகையிட்டனர். அதன்பிறகே அவர் வெளியேற முடிந்தது.
போராட்டக்காரர்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தங்களை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். இதுகுறித்து, கலெக்டர் பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், மீனவ பிரதிநிதிகள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
குமரி மாவட்டத்திலிருந்து 855 மீனவர்கள் மாயமாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்படும் என்றும் கலெக்டர் உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications