குமரியை புரட்டிப்போட்ட மழை.. தாண்டவம் ஆடிய 'ஓகி' .. தென்கோடியில் என்ன நடக்கிறது? #CycloneOckhi
கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்று வட்டப்பகுதிகளில் நேற்று காலையில் இருந்து பெய்து வரும் மழை மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது
Recommended Video

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்று வட்டப்பகுதிகளில் நேற்று காலையில் இருந்து பெய்து வரும் மழை மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஓகி புயல் ஏற்படுத்திய கொடுங்காற்று மொத்த மாவட்டத்தையே புரட்டி போட்டு இருக்கிறது.
நாகர்கோவில் தொடங்கி மார்த்தாண்டம் வரை அனைத்து பகுதிகளும் கடந்த 30 மணி நேரமாக தமிழ்நாட்டில் இருந்து துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் பல பகுதிகளுக்கு மின்சாரமும், உணவுப் பொருட்களும் கிடைக்கவில்லை.
ஓகி புயல் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக இன்னும் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. ஏற்கனவே அந்த மாவட்டத்தில் சில முக்கியமான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதால் ஓகி புயல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓகி புயலின் தொடக்கம்
சரியாக நேற்று காலையில் இருந்து ஓகி புயல் கொஞ்சம் கொஞ்சமாக குமரி மாவட்டத்தை தாக்க தொடங்கி இருந்தது. 11 மணி அளவிற்கு அங்கு காற்றின் வேகம் மிகவும் அதிகமானது. முதலில் 170 கிமீ தொலைவில் இருந்த புயல் குமரிக்கு தெற்கே 60கிமீ வரை வந்தது. புயல் இவ்வளவு அருகில் மையம் கொண்டு இருந்ததால் கேரளா எல்லை தொடங்கி நாகர்கோவிலுக்கு வெளியே வள்ளியூர்வரை கொடூரமான காற்று அடித்தது.

மின்சாரம்
புயல் ஆரம்பித்த சில மணி நேரத்தில் கன்னியாகுமரி முழுக்க மின்சாரம் தடைபட்டது. அங்கு இருக்கும் இரண்டு பெரிய பொறியியல் கல்லூரியிலும், இரண்டு பெண்கள் கல்லூரியிலும் தங்கி இருந்த விடுதி மாணவர்கள் இன்னும் மின்சாரம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். 30 மணி நேரமாக இன்னும் ஒரு இடத்தில் கூட மின்சாரம் மீண்டு வரவில்லை.

தொலைத்தொடர்பு துண்டிப்பு
இந்த நிலையில் மின்சாரம் சென்ற சில நிமிடத்தில் அந்த மோசமான சம்பவம் நடந்தது. நாகர்கோவின் வேப்பமூடு சந்திப்பில் உள்ள இரு செல்போன் டவர்கள் அப்படியே சரிந்து விழுந்தது. இந்த இரண்டு டவர்கள் தான் சுற்றி 25 கிமீக்கும் அதிகமான பகுதிக்கு சிக்னல் வழக்கிக் கொண்டு இருந்தது. இந்த டவர்கள் விழுந்த காரணத்தால் உடனடியாக அங்கு மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

மொத்தமாக சரிந்த மரங்கள்
குமரியின் அழகான மரங்கள்தான் இந்த மழைக்கு பெரிய ஆபத்தாக மாறியது. குமாரகோவில், தக்கலை, பார்வதிபுரம், அரண்மனை, திங்கள்சந்தை, வில்லுக்குறி என ஒரு இடங்கள் விடாமல் அனைத்து பகுதியிலும் மரங்கள் விழுந்தது. முக்கிய பகுதியான பார்வதிபுரம் ஜங்க்ஷனில் மழை காரணமாக மரம் விழுந்து மொத்தமாக போக்குவரத்து பாதித்தது.

மோசமான பேருந்து
கடந்த 10 வருடமாக குமரி மாவட்ட மக்களின் முக்கிய கோரிக்கையாக இருப்பது நல்ல பேருந்துகள் மட்டும் தான். சென்னையில் ஓடி காலாவதியாகிய பேருந்துகளுக்கு பெயிண்ட் அடித்து, நம்பர் பிளேட் கூட மாற்றாமல் கன்னியாகுமரியில் 'எக்ஸ்பிரஸ் பேருந்து' என்று பெயர் போட்டு ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். மழை பெய்தால் அணையை மூடுவது போல பஸ் கூரையை தார் பாய் போட்டு மூடுவதற்கே தனி அரசு ஆணை வெளியிட வேண்டிய அளவுக்கு அங்கு பேருந்துகள் மோசமாக இருக்கிறது. இந்த நிலையில் நேற்று மட்டும் 6க்கும் அதிகமான பேருந்துகள் ஆங்காங்கே தண்ணீரில் மூழ்கி அப்படியே நின்று இருக்கிறது.

தண்ணீர் தண்ணீர் இந்த நிலையில் அந்த ஊரின் அழகான வடிவமைப்பு தற்போது பெரிய சிக்கலை ஏற்படுத்து இருக்கிறது. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி செல்ல செல்ல சாலை தாழ்வாகிக் கொண்டே செல்லும். தற்போது இதன்காரணமாக அங்கு அதிக அளவில் வெள்ளம் தேங்கி உள்ளது. தேங்கியிருக்கும் இருக்கும் தண்ணீர் எங்கும் வெளியேற வழியில்லாமல் இருக்கிறது. மேலும் அங்கு இருக்கும் முக்கியமான ஏரிகளும், குளங்களும், திற்பரப்பு அருவியும் மொத்தமாக நீரால் நிரம்பி நிற்கிறது.
இந்த நிலையில் அந்த ஊரின் அழகான வடிவமைப்பு தற்போது பெரிய சிக்கலை ஏற்படுத்து இருக்கிறது. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி செல்ல செல்ல சாலை தாழ்வாகிக் கொண்டே செல்லும். தற்போது இதன்காரணமாக அங்கு அதிக அளவில் வெள்ளம் தேங்கி உள்ளது. தேங்கியிருக்கும் இருக்கும் தண்ணீர் எங்கும் வெளியேற வழியில்லாமல் இருக்கிறது. மேலும் அங்கு இருக்கும் முக்கியமான ஏரிகளும், குளங்களும், திற்பரப்பு அருவியும் மொத்தமாக நீரால் நிரம்பி நிற்கிறது.

பழைய சாலைகள்
இரண்டு மாநிலங்களை இணைக்கும் சாலைகள் மிகவும் மோசமாக போடப்பட்டு இருப்பது கன்னியாகுமரியில் மட்டும்தான். மேலும் அங்கு தற்போது தேசிய 4 வழி சாலை போடும் பணிகள் வேறு நடைபெற்று வருகிறது. சாதாரண சமயங்களில் சென்றாலே எப்போது எங்கு குழி இருக்கும் என்று தெரியாத அளவுக்கு அங்கு சாலைகள் மோசமாக இருக்கும். இப்போது மழை காரணமாக சாலைகள் மொத்தமாக காலாவதியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications