கன்னியாகுமரி கொத்தனாரின் விபரீத செயல்.. பந்தயத்துக்காக குடித்த ஃபுல் பாட்டில் . உயிருக்கே ஆபத்து!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ரூ.500 பந்தயத்திற்காக ஒரு ஃபுல் பாட்டில் மதுபானத்தை அப்படியே குடித்து, சரிந்து விழுந்த சுபின் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குடி போதையில் மனிதர்கள் விபரீதமான செயல்களில் ஈடுபடுவார்கள். குடி வெறியில் ஏராளமான குற்றச் சம்பவங்களும் நடப்பதைப் பார்க்கிறோம். குடி மயக்கம் தரும் மகிழ்ச்சியில் விபரீத எண்ணங்களால் தங்கள் உயிருக்கே உலை வைத்துக்கொண்ட நபர்களும் உண்டு.

இப்படித்தான் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே சுபின் என்பவர் செய்த விபரீதம் அவரது உயிருக்கே ஆபத்தை விளைவித்துள்ளது. கட்டிட தொழிலாளியான சுபினுக்கு 40 வயது. இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது போதை விவாதத்தில் விபரீதமான பந்தயம் ஒன்றை கட்டியுள்ளனர்.
ஒரு ஃபுல் பாட்டில் மதுபானத்தை குடித்தால் ரூ.500 கொடுப்பதாக நண்பர்கள் பந்தயம் கட்டியுள்ளனர். இதையடுத்து ரூ.500 பந்தயத்திற்காக ஒரு ஃபுல் பாட்டில் மதுபானத்தை அப்படியே குடித்து, சரிந்து விழுந்துள்ளார் சுபின். அவரது நண்பர்கள் அவரை எழுப்ப முயன்றுள்ளார். ஆனால், அவரால் அசையக்கூட முடியவில்லை.
இதையடுத்து, சுபின் உயிரிழந்து விட்டதாக கருதி, பயந்து போன நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதையடுத்து அப்பகுதிக்கு சென்றவர்கள் சுபின் சுயநினைவின்றிக் கிடப்பதைப் பார்த்துள்ளனர். இதையடுத்து, இறந்த நிலையில் ஒருவர் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இறந்த நிலையில் ஒருவர் கிடப்பதாக வந்த தகவலை வைத்து அங்கு சென்ற போலீசார், சுபின் உயிரோடு இருப்பதைக் கண்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கட்டிடத் தொழிலாஇயான சுபின், தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 500 ரூபாய் பந்தயத்துக்காக கட்டிட தொழிலாளி உயிரைப் பணயம் வைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications