பியூட்டி பார்லரில் இந்தம்மா செய்த காரியத்தை பாருங்க.. அதுவும் மகள் வயது பெண்ணிடமே.. காரைக்குடி ஷாக்
பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டுள்ளது
காரைக்குடி: பிளஸ் 2 மாணவிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த மாணவி அவர்.. பிளஸ் 2 படிக்கிறார்.. இவர் அப்பா ஒரு டிரைவர். சக வகுப்பு தோழியின் அம்மா, அதே பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரில் பொறுப்பாளராக வேலை பார்த்து வருகிறார்..
ஒருநாள் தன் தோழியுடன், அந்த பியூட்டி பார்லருக்கு சென்றுள்ளார் மாணவி. அப்போதுதான் அந்த பியூட்டி பார்லரின் ஓனர் மன்ஸில் என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. மன்ஸில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்.

மாணவி
அதே அழகு நிலையத்தில் விக்னேஷ், சிரஞ்சீவி, ஹரீஷ் ஆகிய 3 பேரும் வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் மன்ஸில் நாளடைவில் மாணவியுடன் நெருங்கி பழகி உள்ளார்.. இவர்கள் அனைவருமே மாணவியை அடிக்கடி சினிமாவுக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.. பலசமயம் மது வாங்கி கொடுத்தும் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.. இந்நிலையில், மாணவி அடிக்கடி ஸ்கூலுக்கு வராமல் ஆப்சென்ட் ஆனதாக பள்ளி நிர்வாகம், அவரது தந்தைக்கு தகவல் தந்துள்ளது.

தந்தை
இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை, பள்ளிக்கு செல்லாதது குறித்து மகளிடம் விசாரித்தார்.. அப்போதுதான் பல சிக்கலில் தன்னுடையமகள் பாதிக்கப்பட்டிருப்பது அவருக்கு தெரியவந்தது... பதறிபோன தந்தை, உடனடியாக காரைக்குடி அனைத்து மகளிர் ஸ்டேஷனில், மகளுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் அளித்தார்.

தோழி
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பியூட்டி பார்லரின் ஓனரான மன்ஸில் என்பவரையும், அங்கு வேலை பார்க்கும் காரைக்குடி பகுதியை சேர்ந்த 28 வயதான விக்னேஷ், அறந்தாங்கியை சேர்ந்த 31 வயதான சிரஞ்சீவி, ஹரீஷ், அழகு நிலைய பொறுப்பாளர் மற்றும் அவரது மகளும் பாதிக்கப்பட்ட மாணவியின் தோழியுமான சிறுமி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தோழியின் அம்மா
இதில், விக்னேஷ், சிரஞ்சீவி, அழகுநிலைய பொறுப்பாளர் ஆகிய மூவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்... தலைமறைவான முக்கிய குற்றவாளி மன்ஸில் மற்றம் ஹரீஷை போலீசார் தேடி வருகின்றனர்.. இது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டது.. அப்போதுதான், பள்ளி மாணவிக்கு நடந்த பாலியல் சீண்டல், மாணவியின் தோழிக்கும் அவரது அம்மாவிற்கும் தெரியும் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.. இன்னும் சொல்லப்போனால், மன்ஸில் இப்படி பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது தெரிந்தேதான், தோழியின் அம்மா அனுமதித்துள்ளாராம்..!

பெற்ற தாய்
கோவை மாணவியின் தற்கொலை கொந்தளிப்பே இன்னும் அடங்கவில்லை.. பாலியல் டார்ச்சர் குறித்து புகார் சொல்லியும் அந்த பள்ளி முதல்வர் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்தான், ஜெயிலுக்குள் இப்போது அடைக்கப்பட்டுள்ளார்.. ஆனால், இங்கே மகள் வயதில் உள்ள ஒரு பெண்ணை, தெரிந்தே பாலியல் சீண்டலுக்கு அனுமதித்த இந்த தாயை என்ன செய்வது?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications