ஓடு உடைத்து, பேச்சுப் போட்டி நடத்தி சிறுவர்கள் தினத்தைக் கொண்டாடிய காரைக்குடி பள்ளி
காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சிறுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டது.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா இன்று(14.11.16) சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு காரைக்குடி அழகப்பாபுரம் லயன்ஸ் கிளப் தலைவர் எஸ். முத்துக்குமார் தலைமையேற்றார்.. தலைமையாசிரியர் ஆ.பீட்டர்ராஜா அனைவரையும் வரவேற்றார். காரைக்குடி அழகப்பாபுரம் லயன்ஸ் கிளப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இவ்விழாவில் மாணவர்கள் பாட்டு, நடனம், நாடகம், கீபோர்டு இசைத்தல், கவிதை வாசித்தல் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி அனைத்து மாணவர்களையும் மகிழ்வித்தனர். மாணவர்கள் பாரதி மற்றும் சோலை ஐயப்பன் சிலம்பாட்டம் ஆடி அனைவரையும் கவர்ந்தனர்.

பழனிக்குமார் மற்றும் ஷேக் முஹம்மது சபிக் கராத்தே மூலம் ஓடுகளை உடைத்து அனைவரின் பாராட்டைப் பெற்றனர். இவ்விழாவையொட்டி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, பாட்டுப்போட்டி, மாறுவேடப்போட்டி, பூங்கொத்து செய்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவர் பி. கண்ணன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். பெற்றோர்களும் இந்நிகழ்ச்சியை கண்டு களித்தனர். மாணவர்களே இந்நிகழ்ச்சிக்களை தொகுத்து வழங்கியது அனைவரின் பாராட்டைப் பெற்றது.

பட்டதாரி ஆசிரியர் சித்ரா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி மற்றும் மீனாட்சி செய்திருந்தனர்.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications