கோலாகல திறப்பு.. மீண்டும் பள்ளிக்கு வந்த மாணாக்கர்கள்!
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி கோடை விடுமுறை முடிந்து இன்று (07.06.2017) கோலாகலமாகத் துவங்கியது.
துவக்க விழாவிற்கு காரைக்குடி நகராட்சி ஆணையாளர் திருமதி. சுந்தரம்பாள் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பீட்டர் ராஜா வரவேற்றார்.
ஆணையாளர் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்கினார்.

மாணவர் குறிப்பேடு
2017 -18ம் கல்வியாண்டிற்கான மாணவர் குறிப்பேடு (DIARY) நகராட்சி ஆணையாளர் வெளியிட பட்டதாரி ஆசிரியர் ஜெயமாலினி பெற்றுக் கொண்டார்.

பள்ளி பை
இக்கல்வியாண்டிற்கான பள்ளியின் பெயர் அச்சிடப்பட்ட பையை நகராட்சி ஆணையாளர் கொடுக்க, பட்டதாரி ஆசிரியர் சரவணன் பெற்றுக் கொண்டார்.

மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு
2016 -17ம் கல்வியாண்டில் 705 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 930ஆக அதிகரித்ததற்காக நகராட்சி ஆணையாளர், தலைமையாசிரியர் அவர்களையும், ஆசிரிய பெருமக்களையும், பாராட்டினார்.

தலைமை ஆசிரியரின் அறிவுரை
தலைமையாசிரியர் பீட்டர் ராஜா மாணவர்கள் ஒழுக்கத்துடனும், பண்போடும் நடந்து கொள்ள வேண்டும். 2017 -18 ம் கல்வியாண்டில் மாணவர்கள் பள்ளிக்கு பெருமை சேர்க்கும் விதமாக அவர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க இப்போதிருந்தே தயாராக வேண்டும் என அறிவுரை கூறினார்.

டை கட்டும் பயிற்சி
புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளியின் விதிமுறைகளும், நேர்த்தியான சீருடையில் வரவேண்டும் என்ற நோக்கத்தோடு டை கட்டும் பயிற்சி அளிக்கப்பட்டது.

சிறப்பான ஏற்பாடுகள்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி, கோமதி செய்திருந்தார்கள். பட்டதாரி ஆசிரியர் முத்துவேல்ராஜன் நன்றி கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications