ஆர்ப்பரிக்கும் காவிரி.. 119 அடியைத் தொட்டது மேட்டூர் அணை நீர்மட்டம்.. பெரும் குஷியில் விவசாயிகள்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117அடியை தாண்டியுள்ளது.
சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை எட்டியுள்ளது. இன்று இரவே அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணை நிரம்புவதையொ ட்டி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 120 அடியாகும். இன்னும் சில மணி நேரங்களிலேயே இந்த அளவை அது எட்டும் எனத் தெரிகிறது.

கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் 67,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் கபினி அணை நிறைந்தது. அதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையும் நிரம்பியது.
தற்போது அங்கு மீண்டும் பெரிய அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து இருக்கிறது. வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரித்து இருக்கிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரவு 7 மணி வாக்கில் 119 அடியை தொட்டதாக அறிவிக்கப்பட்டது. அணையிலிருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இது இன்று இரவு மேலும் அதிகரித்து விநாடிக்கு 30,000 கன அடி நீராக அதிகரிக்கப்படவுள்ளது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியாகிறது. இதனால் இன்று கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.
அமை நிரம்புவதைத் தொடர்ந்து விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஆடிப் பெருக்கையொட்டி அணை திறக்கப்பட்டு காவிரியில் தண்ணீர் ஓடுவதால் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications