கருணாஸை எதிர்த்து மோதுகிறோம்.. ஆனால் மனம் புண்படாமல் பார்த்துப்போம்.. கார்த்திக் ராக்ஸ்!
சென்னை: சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் தொடங்கி, அது முடிந்து, மனுக்கள் பரிசீலனை முடிந்து, மனு வாபஸ் அவகாசமும் முடிந்து, இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியாகி விட்ட நிலையில் தனது கூட்டணி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று அறிவித்துள்ளார் விடியல் கூட்டணியின் தலைவர் நடிகர் கார்த்திக்.
Think differently but behave indifferently என்ற புது மொழியைப் படைத்தவர் கார்த்திக். அரசியலில் இவர் போகும் பாதையை இவரால் கூட சரியாக கணிக்கவே முடியாது. அப்படி ஒரு பயணம் இவருடையது.
நடப்பு சட்டசபைத் தேர்தலில் இவரது அணுகுமுறைகள் அனைவரையும் குழப்பி, கடைசியில் அவரும் குழம்பி, எந்தக் கூட்டணியிலும் இடம் பெற முடியாமல் அவரே ஒரு கூட்டணியை உருவாக்கி, அதுவும் 2 முறை உடைந்து என ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்து போய் விட்டன.

அதாவது என்னன்னா!
இப்போது திடீரென ஒரு பிரஸ் மீட் வைத்து தங்களது கூட்டணி குறித்த சில விஷயங்களைக் கூறியுள்ளார் கார்த்திக். அவர் கூறுகையில், தமிழக சட்டசபைத் தேர்தலில் விடியல் கூட்டணி 50 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

சிலதை நிராகரிச்சுட்டாங்க
சில தொகுதிகளில் விடியல் கூட்டணி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சாதாரண காரணங்களுக்காக நிராகரித்துள்ளனர். Its wrong. அவற்றை விடுத்து சிவசேனா கட்சி 35 தொகுதிகளிலும், தமிழக மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், நாடாளும் மக்கள் கட்சி 13 தொகுதிகளிலும் என 50 தொகுதிகளில் விடியல் கூட்டணி போட்டியிடுகின்றன.

இன்று முதல் பிரச்சாரம்
எங்களது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, இன்று முதல் நான் பிரச்சாரம் செய்ய உள்ளேன். தனி நபர் தாக்குதலை மையப்படுத்தி வாக்கு கேட்டு வருகின்றனர். மக்களிடம் உள்ள பொதுவான பிரச்னைகளை முன் வைத்தே விடியல் கூட்டணி வாக்கு சேகரிக்கும். தனி நபர் தாக்குதல் இருக்காது.

கருணாஸுடன் மோதுகிறோம்
நடிகர் கருணாஸ் போட்டியிடும் திருவாடானை தொகுதியில் நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடுகிறது. அவர் மீது நன்மதிப்பு உள்ளது. எந்த வகையிலும் அவரது மனம் பாதிக்கும் வகையில், விடியல் கூட்டணி பிரசாரத்தில் ஈடுபடாது.

ஜெயலலிதா மீதும் மரியாதை உண்டு
அதேபோல, முதல்வர் ஜெயலலிதா மீது தனிப்பட்ட மரியாதை உண்டு. அதனால் அவர் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று கூறினார் கார்த்திக்.

பார்த்து பாஸ்!
பார்த்து பாஸ்.. திருவாடானைக்கு வந்தப்போ, கருணாஸ் "பவன்டோ" வாங்கிக் கொடுத்தாரு, மனசெல்லாம் குளிர்ந்து போச்சுன்னு சொல்லிட்டு நீங்க பாட்டுக்கு டப்புன்னு மெட்ராஸுக்குக் கிளம்பிப் போயிராதீங்க!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications