என் கணவர் என்னிடம் உண்மையாக இல்லை - கார்த்திக் மீது மைனா நந்தினி புகார்

என் கணவரை நான் உண்மையாக நேசித்தேன். ஆனால், அவர் எனக்கு உண்மையாக இல்லை என்று மைனா நந்தினி கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நானும் கார்த்திக்கும் கடந்த ஒரு வருடமாக காதலித்தோம். என் கணவரை நான் உண்மையாக நேசித்தேன். ஆனால், அவர் எனக்கு உண்மையாக இல்லை என்று நடிகை மைனா நந்தினி கூறியுள்ளார். தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் நந்தினியின் அப்பாதான் என்று அவர் கடிதம் எழுதியிருந்தார். இதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நந்தினிக்கும் கார்த்திக்கிற்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையிலேயே திங்கட்கிழமை இரவு கார்த்திக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நந்தினி கதறல்

நந்தினி கதறல்

கணவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி கேள்விப்பட்டு மைனா நந்தினி கதறி அழுதார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், என் கணவர் கார்த்திக், அரசாங்க வேலை வாங்கித் தருவதாக பலரிடம் 80 லட்சத்திற்கும் மேல் பணம் வாங்கியிருந்தார் என்பது எனக்கு பிறகுதான் தெரிய வந்தது. ஏன் இப்படி செய்தாய்? என நான் கேட்டால், தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார்.

கார்த்திக் மோசடி

கார்த்திக் மோசடி

கார்த்திக் பணம் வாங்கியவர்கள் யாருக்கும் வேலை வாங்கித் தரவில்லை. எனவே, அவர்கள் அவருக்கு பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். எனவே, அவர் மன உளைச்சளில் இருந்தர். நான் அவருக்கு ஆறுதல் கூறி வந்தேன். எனக்கு நகை வாங்கி தருவதாக கூறி என்னிடமிருந்து ரு.20 லட்சம் வரை கார்த்திக் பணம் வாங்கினார். ஆனால், எந்த நகையையும் அவர் வாங்கித் தரவில்லை.

சேர்த்த பணம் செலவானது

சேர்த்த பணம் செலவானது

இரவும் பகலும் கஷ்டப்பட்டு உழைத்த பணம் அனைத்தையும் அவரிடமே கொடுத்தேன். மேலும், இன்னொரு பெண்ணுடன் அவர் தொடர்பில் இருந்ததும், அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதும் எனக்கு தெரிய வந்தது. எனவே, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், இதுபற்றி யாருக்கும் தெரிவிக்கவில்லை.

பிரிந்து சென்றேன்

பிரிந்து சென்றேன்

பிரச்சினை தெரிந்து எனது குடும்பத்தினர் அவரிடமிருந்து என்னை பிரித்து எனது வீட்டிற்கே கூட்டி சென்று விட்டனர். இருந்தாலும், அவரை நான் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அதனால்தான் அவரை சந்தித்து எல்லா பிரச்சனைகளையும் முடித்து விட்டு வா. நான் மீண்டும் இணைந்து வாழ்வோம் எனக் கூறியிருந்தேன். ஆனால் இப்படி தற்கொலை செய்து கொள்வார் என நான் எதிர்பார்க்கவில்லை.

தற்கொலை செய்வதா?

தற்கொலை செய்வதா?

இந்த செய்தி கேள்வி பட்டதும், வழக்கம் போல் பயமுறுத்துகிறார் என நினைத்துதான் சென்றேன். ஆனால், அவர் இப்படி செய்துவிட்டார். என் கணவர் பற்றி யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டேன். ஆனால், தற்போது அவரைப் பற்றி எல்லாவற்றையும் வெளியே கூறும்படி அவர் செய்து விட்டார்.

உண்மையாக இல்லை

உண்மையாக இல்லை

அவரை நான் உண்மையாக நேசித்தேன். ஆனால், அவர் எனக்கு உண்மையாக இல்லை. அவரது உடலை பார்க்கும் சக்தி எனக்கில்லை.என கூறி நந்தினி கதறி அழுதார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+