வெள்ளம் பாதித்த பகுதிகளில் கருணாநிதி: நிவாரண உதவி வழங்கி ஆறுதல்
சென்னை: சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக தலைவர் கருணாநிதி நேரில் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார். சென்னை சிந்தாதிரிபேட்டை நெடுஞ்செழியன் நகருக்கு சென்ற கருணாநிதி அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

வடகிழக்குப் பருவமழை கடந்த ஒருமாதகாலமாக சென்னையில் கொட்டி வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்த மழையால் ஏரிகள் பெருகி, அதிலிருந்து திறந்து விடப்படும் உபரிநீர் குடியிருப்புகளை மூழ்கடித்துள்ளது. அரசியல் கட்சித்தலைவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா, ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். பிரதமர் மோடியும் தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். திமுக பொருளாளர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை திமுக தலைவர் கருணாநிதி இன்று நேரில் பார்வையிட்டார். சென்னை சிந்தாதிரிபேட்டை நெடுஞ்செழியன் நகருக்கு சென்ற கருணாநிதி அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நிவாரண உதவிகளையும் அவர் வழங்கினார்.

இதனையடுத்து சைதாப்பேட்டைக்கு சென்ற அவர் அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழைமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதனை தொடர்ந்து கோட்டூர்புரத்திற்கு கருணாநிதி சென்றார். பலத்த மழையால் அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கும், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர் ஆறுதல் கூறினார். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் திமுகவினரும் பொதுமக்களும் வழங்கிய நிவாரண பொருட்களை வெள்ளம் பாதித்த மக்களுக்கு கருணாநிதி வழங்கினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications