அதிமுக ஆட்சிக் காலத்தில் அவசர கோலத்தில் பல கோடி பேரங்களுடன் கடைசிநேர நியமனங்கள்
கேள்வி : பதிவுத் துறையில் ஆயிரம் காலிப் பணி இடங்களுக்கு 29-2-2016 அன்று நேர்காணல் என்றும், 4 லட்சம் ரூபாய் வீதம் வசூல் என்றும் செய்தி வந்ததே?
கருணாநிதி: தேர்தல் அறிவிப்பு வரவிருந்த நிலையில் இந்தச் செய்தி வந்தது. அறிவிப்பு வருவதற்குள் சுருட்டியது வரை இலாபம் என்ற போக்கில் ஒவ்வொரு துறையிலும் இது சுனாமி வேகத்தில் நடைபெற்றது. அவசர அவசரமாக தேர்வாணையக் கழகத்தில் பல மாதங்களாக காலியாக இருந்த உறுப்பினர் பணி இடங்கள் நிரப்பப்பட்டன. அது போலவே பல்வேறு பல்கலைக் கழகங்களில் காலியாக இருந்த துணை வேந்தர் பணி இடங்கள் நிரப்பப்பட்டன. எல்லாம் பல கோடிக்கணக்கில் விலை போயின என்றும் பேசப்பட்டது.

செய்தித் துறையில் 40 ஏ.பி.ஆர்.ஓ. பதவிகளை உருவாக்கி, வேண்டியவர்களையெல்லாம் அதிலே நியமனம் செய்திருக்கிறார்கள். ஏன், சட்டப்பேரவையிலே கூட காலி இடங்கள் இருப்பதாகக் கூறி ஒரு பதவிக்கு ஐந்து இலட்சம் ரூபாய் வீதம் வசூல் செய்துகொண்டு நியமனம் செய்திருக்கிறார்களாம். அந்த வரிசையில் தான் பதிவுத் துறையில் நேர்காணல் என்ற செய்தியும் வந்தது. பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்களின் ஊழல் பட்டியலில் முதல் இடம் பிடித்தவருக்கு தலைமைப் பொறியாளர் பதவியாம்! "வழக்கத்தில் உள்ள நடைமுறைகளை மீறி, அவசர கதியில் நியமன நடவடிக்கைகள் எடுக்கப்படுவது பல சந்தேகங்களை எழுப்புவதாக பலரும் புகார் தெரிவித்து உள்ளனர்" என்று "தினமலர்" நாளேடே முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், இப்படிப்பட்ட கடைசி நேர நியமனங்கள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் உருவாகாதா?
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications