For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போதை வழக்கில் சுதாகாரன் விடுதலை… வழக்கு போடத்தூண்டியவர்கள் மீது என்ன நடவடிக்கை?: கருணாநிதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Karunanidhi asks govt's comment on Sudhakran release
சென்னை: ஹெராயின் போதை வழக்கில் சுதாகரன் விடுதலை குறித்து ஆளுவோரின் பதில் என்ன? வழக்குப் போடத்தூண்டியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஹெராயின் போதைப் பொருளை வீட்டிலே வைத்திருந்ததாக ஜெயலலிதாஆட்சி யில் 2001ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்ட ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனை சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது பற்றி?

ஜெயலலிதாவுடன் இருக்கும் சசிகலாவின் அக்காள் மகன்தான் சுதாகரன். இவரது திருமணத்தை ஜெயலலிதா தன்னுடைய வளர்ப்பு மகன் என்ற முறையில் பல கோடி ரூபாய் செலவு செய்து சென்னையில் ஆடம்பரமாக நடத்தினார் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள். இவர் யாரோ ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார் என்று புகார் வந்தது என்பதற்காக 2001ஆம் ஆண்டு இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

13.6.2001 அன்று இவர் வீட்டை போலீசார் சோதனை செய்த போது 16 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டதாகக் கூறி, போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள். இவரையும், இவரது நண்பரையும் கைது செய்தார்கள். இந்த வழக்கு 2001ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளாக நடைபெற்றது. 18.4.2013 அன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராமமூர்த்திக்கு கொலைமிரட்டல் வந்ததால் வேறு நீதிபதி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தர விட்டது. இந்த வழக்கில்தான்சுதாகரனையும், நண்பர்களையும் கடந்த 16ஆம் தேதி நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.

நீதிபதி சின்னப்பன் அவர்கள் தனது தீர்ப்பில், "வழக்கில் முக்கிய சாட்சியாகக் கருதப்படும் கோபு ஸ்ரீதரை அரசுத் தரப்பில் சாட்சியாக விசாரிக்கவில்லை. அதற்கான காரணத்தையும் அரசுத் தரப்பு கூறவில்லை. அவரிடம் இரண்டு புகார்கள் பெறப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடத்தினால் அவர் புகார் கொடுத்தாரா அல்லது அவரிடம் புகார் வாங்கப்பட்டதா என்று தெரிந்திருக்கும். அவரை விசாரிக்காததால் அவர் புகார் எதுவும் கொடுக்க வில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

சுதாகரன் வீட்டில் எடுக்கப்பட்டது ஹெராயின் தான் என்று எப்படி உறுதிப்படுத்தப்பட்டது என்று போலீஸ் தரப்பில் கூறப்படவில்லை. சோதனை செய்வதற்கு முன்பு அருகில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலோ அல்லது அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரியிடமோ அழைத்துச் சென்று சோதனை செய்ய வேண்டும். இதை சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் செய்யவில்லை. தனிப்பட்ட சாட்சிகளையும் சேர்க்கவில்லை.

கைப்பற்றப்பட்ட பொருளை எடை போட தராசு கொண்டு செல்லவில்லை. அருகில் உள்ள கடையிலிருந்து தராசும் எடைக்கற்களும் வாங்கிச் சென்றதாகக் கூறப்பட்டது. ஆனால் அந்தக்கடையில் கடந்த 25 ஆண்டாக எலெக்ட்ரானிக் தராசுதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அரசு சாட்சியத்தில் கூறப்பட்டுள்ளது.

சுதாகரன் உள்ளிட்டோர் மீது வழக்குப் போட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு, தனிப்பட்ட நபர்கள் முன்னிலையில் சோதனை மேற்கொண்டு, கற்பனையான பெயர்களைக் குறிப்பிட்டு ஆவணங்கள் தயார் செய்துள்ளதாகத் தெரிகிறது. எனவே இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது" என்றெல்லாம் நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

நீதிபதியின் இந்தத் தீர்ப்பிலிருந்து இந்த வழக்கு வேண்டுமென்றே போடப்பட்ட வழக்கு என்று தெரிகிறதா இல்லையா? அப்படியானால் இவ்வாறு வழக்குப் போடத் தூண்டியது யார்? அதற்குத் துணையாக இருந்தது யார்? அவர்கள் மீது என்ன நடவடிக்கை? அனைவரும் கேட்கிறார்கள்; ஆளுவோர் பதில் என்ன? என்று கேட்டுள்ளார்.

English summary
DMK chief Karunanidhi has asked the govt and cm Jayalalitha's comment on Sudharakaran's release from heroin case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X