நீதித்துறை என்ற தூணில் துளைபோட்டு அதை பலவீனமாக்க நினைக்கிறார் கட்ஜூ: கருணாநிதி
சென்னை: நீதிபதிக்கான கண்ணியத்தையே மார்க்கண்டேய கட்ஜூ இழந்து விட்டார் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கட்டாயப்படுத்தி, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மாவட்ட நீதிபதி ஒருவரை, சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பணி நியமனம் செய்ய வைத்ததாக தி.மு.க. மீது பெயர் குறிப்பிடாமல் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார். மேலும், இதை அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கண்டுகொள்ளவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.

மார்க்கண்டேய கட்ஜூவின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து அறிக்கை விடுத்துள்ளார். அதில், ''நீதிபதிக்கான கண்ணியத்தையே மார்க்கண்டேய கட்ஜூ இழந்து விட்டார். அவரது கருத்து நீதியின் கழுத்தை நெரிப்பதாக இருக்கிறது.
2004ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்திற்கு, 10 ஆண்டுகள் கழித்து தற்போது கட்ஜூ கருத்து கூறுவது ஏன் என்று தெரியவில்லை.
நீதித்துறை என்ற தூணில் துளைபோட்டு அதை பலவீனமாக்க நினைக்கிறார் கட்ஜூ. ஆட்சியில் பதவியை பெற்றுவிட்டு, அந்த அரசு மீதே குற்றம் சாட்டுவது சரிதானா? காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருக்கும்போது, இதுகுறித்து மார்க்கண்டேய கட்ஜூ மவுனம் சாதித்தது ஏன்?'' என கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.
-
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications