5 வருடங்களுக்கு பிறகு சட்டசபைக்குள் காலடி வைத்த கருணாநிதி! திமுகவினர் உற்சாகம்
சென்னை: 5 ஆண்டுகளுக்கு பிறகு, சட்டசபைக்குள் வந்த திமுக தலைவர் கருணாநிதி, சட்டசபை உறுப்பினராகவும் பதவி பிரமாணம் செய்தார். அவருக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சட்டசபையில் சாய்தள வசதியோடு, இருக்கை வசதி செய்து தரப்படவில்லை என்பதால் கடந்த ஆட்சியில் 5 ஆண்டுகளாக, கருணாநிதி சட்டசபைக்குள் செல்லாமல் லாபிக்கு சென்று கையெழுத்து போட்டு விட்டு திரும்பி விடுவார்.

இந்நிலையில் 15வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. இப்போது கருணாநிதிக்கு வசதியாக, சாய்தள வசதியை அரசு செய்து கொடுத்துள்ளது. இதையடுத்து அவைக்குள் வந்த கருணாநிதி, எம்.எல்.ஏவாக பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார். செம்மலை அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
5 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக அவைக்குள் கருணாநிதி வருகை தந்தது, திமுகவினரை உற்சாகப்படுத்தியது. 89 உறுப்பினர்களோடு திமுக வலுவான எதிர்க்கட்சியாக உள்ளதாலும், சாய்தள வசதி செய்யப்பட்டுள்ளதாலும், கருணாநிதி இனிமேல் சட்டசபைக்கு அவ்வப்போது வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே உறுதிமொழி எடுத்த பிறகு சபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, சட்டசபைக்கு வருவது கடமை என்பதால் வந்தேன். தேர்தல் ஆணையம் என்பது தேர்தலுக்கு எதிரான ஆணையமாக உள்ளது. இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications