தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார் கருணாநிதி..!
சென்னை: 14வது சட்டசபைத் தேர்தலைச் சந்திக்கும் திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை சென்னையில் தனது பிரசாரத்தைத் தொடங்கினார்.
சென்னை சைதாப்பேட்டையில் இன்று மாலை பிரசாரத்தைத் தொடங்கிய கருணாநிதி, தொடர்ந்து வேனில் பயணித்தபடி மரக்காணத்தை சென்றடைகிறார். அங்கு அவர் வேனிலிருந்தபடி பேசுகிறார். இரவு 7.30க்கு புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் பேசி வாக்கு சேகரிக்கிறார்.

தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபடும் கருணாநிதி, திங்கள்கிழமை, அதாவது ஏப்ரல் 25ம் தேதி திருவாரூரில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
நாளை மாலை 4 மணிக்கு கடலூர் பொதுக்கூட்டத்திலும், மாலை 5 மணிக்கு சிதம்பரத்தில் வேனில் இருந்தபடியும் பேசும் கருணாநிதி, மாலை 6.30 மணிக்கு சீர்காழியில் வேனில் இருந்தபடி பேசி வாக்கு சேகரிக்கிறார். இரவு 7.30 மணிக்கு மயிலாடுதுறையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசுகிறார்.
25ம் தேதி திருவாரூரில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அன்றைய தினம் இரவு 7 மணிக்கு திருவாரூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
26ம் தேதி மாலை 5 மணிக்கு தஞ்சை பொதுக்கூட்டத்திலும், 27 இரவு 7 மணிக்கு திருச்சி பொதுக்கூட்டத்திலும் கருணாநிதி பேசுகிறார்.
28ம் தேதி பெரம்பலூர், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டில் பிரசாரத்தை முடித்துவிட்டு சென்னை திரும்புகிறார்.
3 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் மே மாதம் 2ம் தேதி நெல்லையில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து 3ம் தேதி விருதுநகர், மதுரை மாவட்டங்களில் , 5ம் தேதி சென்னை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
7 காஞ்சீபுரம், வேலூர் மாவட்டங்களிலும், 8 கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களிலும், 9 ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும், 12 தேதி திருவாரூரிலும், 14ம் தேதி சென்னையிலும் தேர்தல் பிரசாரம் செய்கிறார் கருணாநிதி.
சிறப்பு வேன்
கருணாநிதி பிரசாரம் செய்வதற்கு வசதியாக சகல வசதிகளுடனும் கூடிய பிரத்யேக வேன் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வேனில்தான் தமிழகத்தைச் சுற்றி வரப் போகிறார் கருணாநிதி.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications