சேது சமுத்திர திட்டத்தை யார் எதிர்த்தாலும் நிறைவேற்றியே தீருவோம்: மதுரையில் கருணாநிதி சபதம்
மதுரை: சேது சமுத்திர திட்டத்தை யார் எதிர்த்தாலும் திமுக ஆட்சி அமைந்தததும் நிறைவேற்றப்படும் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கூறினார்.
மதுரையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அண்ணாநகர் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது:

110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளன என ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால், ரூ. 100 கோடியில் மதுரையில் தமிழ் தாய்க்கு சிலை அமைக்கப்படும் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தார் ஜெயலலிதா. மதுரையில் எங்கு தேடிப்பார்த்தும் சிலையை கண்டுப்பிடிக்க முடியவில்லை.
இது போன்ற பொய் மூட்டைகளை ஜெயலலிதா அவிழ்த்து விட்டு கடந்த 5 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருகிறார். அவரின் பொய் மூட்டைகளுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. இதற்குமேல் ஜெயலலிதாவை நம்பினால், நீங்கள் தான் ஏமாந்து போவீர்கள்.
மதுரை முத்துவை நான் என்றும் மறப்பதில்லை. அவர் மேல் கொண்ட பற்று பாசம் காரணமாக மதுரையை மாநகராட்சியாக மாற்றி அவரையே மேயராக ஆக்கி பெருமைபடுத்தியவன் நான். எனவே நான் மதுரையையும் மதுரை மக்களையும் நேசிப்பேன்.
மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் வளர்ச்சி பெறும் வகையில் சேது சமுத்திர திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டத்தால் மதுரை வளம் பெறுவதோடு சுற்றியுள்ள பகுதிகளிலும் வாணிபம் வளரும். திட்டம் திறைவேறியிருந்தால் மதுரை செழிப்புள்ள, அருமையான வசதிகள் கொண்ட நகராக மாறியிருக்கும்.
சிலர் ராமர் பாலம் எனக் கூறி திட்டத்தை தடுத்து வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தததும் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும். யார் எதிர்த்தாலும் எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும்.
மேலும், திமுக ஆட்சிக்கு வந்தததும் மதுரையில் நடைபெற்ற கிரானைட் ஊழல் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும்.
தமிழகத்தில் மக்களைப் பற்றி கவலைப்படாத ஆட்சி நடைபெற்று வருகிறது. சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்ட போது நானே நேரில் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டேன்.
கரூரில் அன்பு நாதனிடம் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து மத்திய அரசு மவுனமாக இருப்பது ஏன். ஊழலின் பிறப்பிடமாக தற்போதைய ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்றார் கருணாநிதி.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications