மீனவர் சட்டதிருத்த மசோதா மீனவர்களுக்கு எதிரானது - கருணாநிதி கண்டனம்
சென்னை: மீன்படிச் சட்டத்தில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள திருத்தம் மீனவர்களுக்கு எதிரானது என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
சட்டப் பேரவையின் கடைசி நாளில், மீன்பிடிச் சட்டத்தில் அதிமுக அரசு கொண்டு வந்துள்ளதுள்ள திருத்தத்தால் மீனவர்கள் வேதனையடைந்துள்ளனர்.மீன்பிடி தொழிலில் 18 வயதுக்குக் குறைவானவர்களை ஈடுபடுத்தக் கூடாது.

விதிமுறைகளை மீறிச் செயல்பட்டால், ஆயுள் காலத்துக்கும் படகுகளின் உரிமம் ரத்து செய்யப்படும். அரசு சலுகைகளும் ரத்தாகும். மீனவர்கள் தங்களது படகுகளின் நீளத்தை அதிகரிப்பதோடு, படகின் வடிவமைப்புக்கு ஏற்ற குதிரைத் திறனில், எஞ்சின் பொருத்த வேண்டும்.
மீன்பிடி விசைப்படகுகள், ஐந்து கடல் மைல்களுக்கு அப்பாலும், ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் 12 கடல் மைல்களுக்கு அப்பாலும் சென்று மீன் பிடிக்க வேண்டும் உள்பட பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கை அரசின் கடற்படையினரால் தொடர்ந்து பல வகையிலும் மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், வாழ்வாதாரத்தை இழந்துவரும் மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளித்து, அரவணைக்க வேண்டிய தமிழக அரசு புதிய மசோதா மூலம் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதித்து தண்டனையை நிறைவேற்றிட வழிவகை ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications