விட்டுட்டு போயிட்டீங்களே தலைவா.. காவேரி முன் தொண்டர்கள் கதறல்!
திமுக தலைவர் கருணாநிதி மறைவை ஒட்டி கோபாலபுரம் இல்லம் முன்பும், காவேரி மருத்துவமனை முன்பும் திமுக கட்சி தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி வருகிறார்கள்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மறைவை ஒட்டி கோபாலபுரம் இல்லம் முன்பும், காவேரி மருத்துவமனை முன்பும் திமுக கட்சி தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி வருகிறார்கள்.
திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்து உள்ளார். 95 வயதில் காலமானார் திமுக தலைவர் கருணாநிதி. அவர் இன்று மாலை 6.10 மணி இயற்கை எய்தியதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தீவிர சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்துள்ளார். இந்த நிலையில் தற்போது காவேரி மருத்துவமனை முன் திமுக தொண்டர்கள் கூடி வருகிறார்கள்.
அவர் இறந்த செய்தி கேட்டு கண்ணீரில் அவர்கள் சோகமாக கத்தி கூச்சலிட்டு வருகிறார்கள். மிகுந்த துக்கத்துடன் கோஷம் எழுப்பி வருகிறார்கள்.
தலைவா போயிட்டியே தலைவா, தலைவா போயிட்டியே தலைவா என்று கோஷமிட்டு கண்ணீர்விட்டு வருகிறார்கள். மருத்துவமனை அறிக்கையை அடுத்து தொண்டர்கள் கண்ணீருடன் இருக்கிறார்கள்.
மருத்துவமனைக்கு வெளியே தாய்மார்கள், பெண்கள் தலையில் அடித்துக் கொண்டு அழுது வருகிறார்கள். அந்த பகுதியே தற்போது சோகமாக காட்சி அளிக்கிறது.












Click it and Unblock the Notifications