அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும்..விரைவில் திமுக ஆட்சி மலரும்: திருச்சியில் கருணாநிதி நம்பிக்கை
திருச்சி: இன்னும் சில வாரங்களில் அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் அடுத்தது திமுக ஆட்சி மலரும் என்று திருச்சில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசினார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 5 வது நாளாக பிரசாரம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் கருணாநிதி நேற்று திருச்சியில் பிரசாரம் மேற்கொண்டார். இதனிடையே நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது: எதிர்க்கட்சியினர் கூறுவதுபோல, திமுக வெறும் அரசியல் இயக்கம் அல்ல. சமுதாயத்தில் அக்கறை கொண்ட சமூக இயக்கம். திமுக.,வை அழிக்க யாராலும் முடியாது.

மக்களைப் பார்ப்பதே பாவம் என்று கருதி, வீட்டுக்குள் இருந்து ஆட்சி நடத்தும் ஜெயலலிதா, தேர்தல் வந்தவுடன், மக்களுக்காக வாழ்கிறேன் எனக் கூறி பொய் வேடம் போடுகிறார். ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கிறார். அவரின் மோசடி பிரசாரத்திற்கு, தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள். தமிழகத்தில் இருண்ட ஆட்சியை அகற்ற சட்டசபை தேர்தலில் மக்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், அடுத்த சில வாரங்களில், தேர்தல் முடிவடைந்து, திமுக ஆட்சி மலரும். அராஜகம் நிறைந்த அதிமுக ஆட்சி அகற்றப்பட்டு, மக்கள் நலனில் அக்கறை கொண்டதாக, அந்த ஆட்சி அமையும். பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுவது உறுதி. எனவே திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கை சின்னத்திலும் மற்றும் ஏனைய தோழைமை கட்சிகளுக்கும் அவரவர் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார் கருணாநிதி.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications