விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு அரசியல் பொறுப்பாளர் தமிழினி மறைவு: கருணாநிதி இரங்கல்
சென்னை: இலங்கையில் விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளராகச் செயல்பட்ட தமிழினி மறைவிற்கு திமுக தலைவர் கருணாநிதி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
இலங்கையில் விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் சேர்ந்து, அதன் அரசியல் பிரிவு மகளிர் அணியின் பொறுப்பாளராகச் செயல்பட்ட போராளி தமிழினி, புற்று நோய்க் கொடுமைக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்தவர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மறைந்து விட்டார் என்று செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

தனது 19வது வயதிலேயே, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, பல போராட்டங்களை இவரே முன்னிருந்து நடத்தியவர். போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட போதிலும், கவிதை, கட்டுரை, இலக்கியம் என்பதிலும் நாட்டம் கொண்டவர்.
இலங்கை ராணுவ முகாமில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்து, 2013ஆம் ஆண்டு தான் தமிழினி விடுவிக்கப்பட்டு, இலக்கியப் பணியிலே தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டார்.

அவருடைய மறைவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவருடைய குடும்பத்தினருக்கும், இயக்கத் தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications