கருணாநிதி குடும்பத்திற்கே தனி சிறை வேண்டுமே: நடிகை விந்தியா நக்கல்
தர்மபுரி: ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தாவை கொண்டு வருவோம் என்று கூறும் கருணாநிதியின் குடும்பத்திற்கே தனி சிறை வேண்டும் என நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் தர்மபுரி தொகுதியில் அதிமுக சார்பில் பு.தா. இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடிகை விந்தியா தர்மபுரியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில்,

ஜெயலலிதா
மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படும் நல்ல சக்தி ஜெயலலிதா. தன்னுடைய குடும்ப நலனுக்காக மட்டுமே பாடுபடும் தீய சக்தி கருணாநிதி.

கனிமொழி
தமிழர்கள் கொலை செய்யப்பட்டபோது கருணாநிதி அமைதியாக இருந்தார். விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோதும், தலித்துகள் கொல்லப்பட்டபோதும், மாணவர்கள் கொல்லப்பட்டபோதும் அவர் அமைதியாகவே இருந்தார். கனிமொழிக்கு ஒரு பிரச்சனை என்றதும் அவர் பதறியடித்துக் கொண்டு டெல்லிக்கு சென்றார்.

கருணாநிதி
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து மதுவிலக்கில் தான் என்கிறார் கருணாநிதி. மதுவை திறந்துவிட கையெழுத்திட்டவரும் அவர் தானே. ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தாவை கொண்டு வருவோம் என்று கூறும் கருணாநிதியின் குடும்பத்திற்கே தனி சிறை வேண்டும்.

திமுக தேர்தல் அறிக்கை
திமுகவின் தேர்தல் அறிக்கை 500 பக்கங்கள் கொண்டது என்று பெருமையாக கூறுகிறார்கள். தேர்வில் சரியான பதிலை சுருக்கமாக எழுதுபவர் வெற்றி பெறுவதும், பக்கம் பக்கமாக கதை எழுதுபவர் தோல்வி அடைவதும் புதிது அன்று.

அதிமுக
சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெறப் போவது நிச்சயமாகிவிட்டது. தமிழக மக்கள் துரோகத்தையும், துரோகிகளையும் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். தேர்தல் களத்தில் தனித்து போட்டியிடும் பாமக தேர்தலுக்கு பிறகு தனித்து போய்விடும்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications