கருணாநிதி நலம்... நாளை டிஸ்சார்ஜ்- கனிமொழி தகவல்
திமுக தலைவர் கருணாநிதி நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அவரது மகளும் ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.
சென்னை : திமுக தலைவர் கருணாநிதி கடந்த 1 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்த பின் 7 ஆம் தேதியன்று வீடு திரும்பினார்.
கருணாநிதிக்கு கடந்த 15ம் தேதி மீண்டும் உடல்நலத்தில் பாதிக்கப்பட்டது. மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட அவர் மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் மற்றும் தொண்டையில் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.

கருணாநிதிக்கு ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்களின் தொடர் சிகிச்சையை தொடர்ந்து கருணாநிதியின் உடல் நிலை சீராகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் உடல் நலம் பெற்று தொலைக்காட்சி பார்க்கும் கருணாநிதியின் புகைப்படத்தை காவேரி மருத்துவமனை நேற்று வெளியிட்டது.
இதனிடையே திமுக தலைவர் கருணாநிதி நாளை வெள்ளிக்கிழமை டிஸ்சார்ஜாகி வீடு திரும்புவார் என்று அவரது மகள் கனிமொழி கூறினார். கருணாநிதியின் உடல் பூரணமாக குணமடைந்து விட்டதாகவும் கனிமொழி தெரிவித்தார்.
-
கருணாநிதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய மாபெரும் மாஸ்டர் பிளான்! செங்கற்களில் ஒரு சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications