For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெரினா விவகாரம் பற்றி மோடியிடம் பேசினேன்.. இப்போது மகிழ்ச்சி.. மமதா பானர்ஜி

திமுக தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு மரணம் அடைந்தார். இந்த நிலையில் அண்ணா சமாதிக்கு பின் கருணாநிதியை அடக்கம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டது.

Karunanidhi gets in Marina: It is happy news, says Mamata Banerjee

தற்போது அவரை அடக்கம் செய்ய அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. நேற்று இரவு முழுக்க இந்த பிரச்சனை பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது.

அவசர வழக்காக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு தற்போது திமுகவிற்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இந்த மெரினா பிரச்சனை குறித்து, தற்போது மேற்கு வங்க மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு இந்த மரியாதையை நாம் கொடுத்து ஆக வேண்டும்.

இந்த பிரச்சனை குறித்து நேற்று பிரதமர் மோடியிடம் பேசினேன். மெரினாவில் இடம் கொடுக்க அரசிடம் ஆலோசனை வழங்கும்படி மோடியிடம் கோரிக்கை வைத்தேன்.

அவரு தமிழகத்தின் ஆகப்பெரும் தலைவர். உயர் நீதிமன்ற தீர்ப்பு பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

English summary
Karunanidhi gets in Marina: It is happy news, says Mamata Banerjee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X