கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது.. காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது என்று காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது என்று காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
ரத்த அழுத்த குறைபாடு காரணமாக நேற்று நள்ளிரவில், கோபாலபுரம் இல்லத்தில் இருந்து, காவிரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்துச் செல்லப்பட்டார்.

தொண்டர்கள் பதற்றமடைந்த நிலையில், காவிரி மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை நள்ளிரவில் வெளியானது. அதில் ரத்த அழுத்தம் சீர் செய்யப்பட்டுவிட்டதாகவும், தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று மாலை வரை பல்வேறு முக்கிய பிரமுகர்கள், காவிரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதி உடல் நலம் பற்றி விசாரித்தனர். இதனால் தொண்டர்களுக்கு கருணாநிதி உடல் நலம் குறித்து அறியும் எதிர்பார்ப்பு உள்ளது.
இதையடுத்து தற்போது காவிரி மருத்துவமனை, கருணாநிதி உடல் நலம் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இன்று காலை இதேபோல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது காவேரி மருத்துமனை வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு மருத்துவ உபகரண உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஐசியூவில் இருக்கும் சிறந்த மருத்துவர்களின் கண்காணிப்பில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications