லோக்சபா தேர்தல்: ஏப்ரல் 5-ந் தேதி முதல் கருணாநிதி பிரசாரம்- கோவையில் தொடங்குகிறார்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை திமுக தலைவர் கருணாநிதி ஏப்ரல் 5-ந் தேதி கோவையில் இருந்து தொடங்குகிறார்.

திமுக தலைவர் கருணாநிதி இன்று தமது லோக்சபா தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தின் விவரத்தை வெளியிட்டார். கோவையில் ஏப்ரல் 5-ந் தேதி பிரசாரத்தை தொடங்கும் கருணாநிதி, ஏப்ரல் 21-ந் தேதி மத்திய சென்னையில் பிரசாரத்தை நிறைவு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Karunanidhi to launch Lok Sabha poll campaign on Apr 5

லோக்சபா தேர்தல் பிரசாரம் தமிழகத்தில் களைகட்டியிருக்கிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் என பல தலைவர்களும் களத்தில் குதித்துவிட்டனர்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியும் ஏப்ரல் 5-ந் தேதி முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 6-ல் கொங்கு மண்டலம்

5-ந் தேதி கோயம்புத்தூரில் பிரசாரத்தை தொடங்கும் கருணாநிதி 6-ந் தேதியன்று திருப்பூர், ஈரோட்டில் பிரசாரம் மேற்கொள்கிறார். அதன் பின்னர் 7-ந் தேதி சேலத்திலும் 10-ந் தேதியன்று புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்திலும் பிரசாரம் மேற்கொள்கிறார் கருணாநிதி.

11,12-ல் தஞ்சை டெல்டா

11-ந் தேதி இரவு மயிலாடுதுறை, திருவாரூரிலும் 12-ந் தேதி தஞ்சாவூர், திருச்சியிலும் கருணாநிதி பிரசாரம் மேற்கொள்கிறார்.

13-ல் மதுரை

13ந் தேதி மாலை 5 மணிக்கு துவரங்குறிச்சியிலும் பின்னர் இரவு 7 மணிக்கு மதுரையிலும் கருணாநிதி பிரசாரம் மேற்கொள்கிறார்.

ஸ்ரீபெரும்புதூர்..

16-ந் தேதியன்று ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வேலூரிலும் 17--ந் தேதி காஞ்சிபுரத்திலும் அவர் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

19 முதல் 21-ந் தேதி வரை..

19ந் தேதியன்று திருவள்ளூர், வடசென்னையிலும் 20-ந் தேதி தென் சென்னையிலும் 21-ந் தேதி மத்திய சென்னையிலும் பிரசாரத்தை மேற்கொள்கிறார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+