என் தந்தை போன்றவர் கருணாநிதி.. அவரது மரணம் எனக்கு பேரிழப்பு.. சோனியா காந்தி உருக்கம்
சென்னை: கருணாநிதியின் மறைவு தனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சோனியா காந்தி திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், உங்களின் தந்தை கருணாநிதியின் மறைவு செய்தியை கேட்டு மிகவும் துயரமடைந்தேன். உலக அரசியலில் தமிழக அளவிலும் இந்திய அளவிலும் ஒரு உயர்ந்த மனிதர் கருணாநிதி.
தனது வாழ்க்கையை சமூக நீதிக்காகவே அர்ப்பணித்தவர் திமுக தலைவர் கருணாநிதி.

அவர் தனது நீண்ட வாழ்க்கை பயணத்தில், சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காகவும், தமிழகத்தின் முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் வளம் ஆகியவற்றிற்காவும் மற்றும் நாட்டின் மிக ஏழையான மற்றும் வறுமை கோட்டிற்கு கீழுள்ள ஒவ்வொரு குடிமகனின் நலனுக்காகவும் ஓய்வின்றி உடனின்றவர்.
சிறந்த இலக்கியவாதியான கருணாநிதி தமிழ்நாட்டுக்காகவும் தமிழ் கலாச்சாரம் மற்றும் கலைக்காகவும் பெரும் பங்காற்றி உலக அரங்கில் ஒரு அங்கிகாரத்தை பெற்று கொடுத்துள்ளார்.
UPA Chairperson Smt. Sonia Gandhi writes to Thiru @mkstalin, President DMK, condoling the passing away of @kalaignar89. #Karunanidhi pic.twitter.com/SYF9dC0Gww
— Sonia Gandhi (@_SoniaGandhi) August 8, 2018
அவரது தலைமையில் தமிழக அரசும் அரசியலும் சிறப்பாக இருந்தது. அதற்காகவே அவர் எப்போதும் போற்றப்படுவார் மதிக்கப்படுவார். அவர் வழியில் நீங்கள் பணியாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்ததை நான் நம்புகிறேன்.
அவர் என்னிடம் எப்பொழுதும் அன்புடன் நடந்து கொண்டவர். அவர் எனக்கு தந்தை போன்றவர். அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு இழப்பு என கூறியுள்ளார்.
கருணாநிதி போன்ற ராஜதந்திரியை இனி பார்க்க முடியாது. அவரை இழந்து வாடும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன், என சோனியா காந்தி முக ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications