கருணாநிதிக்கு மூச்சு திணறல்.. தற்போது நலமுடன் இருக்கிறார்- கனிமொழி
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார் என்று அவரது மகளும் , ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி கூறியுள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார். டிசம்பர் மாதம் 1ம் தேதி தொடங்கி 7ம் தேதி வரை சிகிச்சை பெற்று வந்தார். குணமடைந்து கோபாலபுரம் வீடு திரும்பிய கருணாநிதியை முக்கிய பிரமுகர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில் தொண்டை மற்றும் நுரையிரல் நோய் தொற்றால் மூச்சு திணறல் ஏற்பட்டதால் வியாழக்கிழமை இரவு மீண்டும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நோய் தொற்றால் மூச்சு விட கருணாநிதி சிரமப்படுவதாகவும், இந்த பிரச்சனையை குணப்படுத்தவே தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
He (Karunanidhi) had some lung infection and breathing difficulty, he is much better now: Kanimozhi pic.twitter.com/1Fh9uxBc83
— ANI (@ANI_news) December 15, 2016
இந்தநிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி," திமுக தலைவர் கருணாநிதிக்கு நுரையிரலில் தொற்று ஏற்பட்டதால் மூச்சு திறணல் காரணமாக அவதிப்பட்டார். தற்பொழுது மருத்துவமனையில் அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைக்கு பிறகு நலமாக உள்ளார் என்று கனிமொழி கூறியுள்ளார்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications