ஒருமுறை கூட தோற்றது இல்லை.. ஹண்டே கடும்போட்டி.. ராஜிவ் காந்தி அனுதாப அலைகளாலும்.. கவிழாத கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாபெரும் அரசியல் புயல்களுக்கு இடையேயும், ஒரு தலைவர் தோல்வியே காணாமல் தேர்தல் களத்தில் அரை நூற்றாண்டை கடந்து சாதிக்க முடியும் என்று நம்ப முடிகிறதா. ஆனால் அப்படி சாதித்தவர்தான் தமிழக முன்னாள் முதல்வரான, கலைஞர் என அன்போடு அழைக்கப்படும் கருணாநிதி.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தின் திருக்குவளை கிராமத்தில் பிறந்த முத்துவேல் கருணாநிதி, 14 வயதில் அரசியலில் நுழைந்தார். நீதிக்கட்சியின் இந்தி எதிர்ப்பு இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட அவர், 1938 இல் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

எழுத்தாளர் கருணாநிதியின் திறமை விரைவில் தமிழ் திரையுலகில் ஒரு இடத்தை அவருக்கு பெற்றுத் தந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டில், எம்.ஜி. ராமச்சந்திரனைக் கொண்டு தனது முதல் திரைப்படமான "ராஜகுமாரி"க்கு வசனம் எழுதினார். கருணாநிதி நீதிக்கட்சி பாரம்பரியத்தில் வந்தவர். அறிஞர் அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) கருணாநிதி சேர்ந்தார்.

33 வயதில் கருணாநிதி தனது முதல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். 1957 ஏப்ரலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள குளித்தலை தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் நுழைந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தஞ்சாவூர் தொகுதிக்கு மாறினார், பின்னர் 1967 இல் சென்னை சைதாப்பேட்டையிலிருந்து போட்டியிட்டார். 1971 இல் சைதாப்பேட்டையில் இருந்து மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றார்.

1977ல், எமர்ஜென்சிக்கு பின், கருணாநிதி அண்ணாநகருக்கு மாறினார். 1977 மற்றும் 1980 தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்றார், ஆனால் 1980 தேர்தல் கடுமையான போராட்டமாகவே இருந்தது. அவரது அரசியல் எதிரியாகவும், மக்கள் செல்வாக்கால் தொடர்ந்து முதல்வராக முடிசூடியவருமான எம்.ஜி.ஆர், அதிமுக சார்பில் பிரபல மருத்துவரான எச்.வி.ஹண்டேவை கருணாநிதிக்கு எதிரான வேட்பாளராக நிறுத்தினார். கருணாநிதி எப்படியோ தோல்வியை தவிர்த்தார். 699 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கருணாநிதி 1984 தேர்தலில் போட்டியிடவில்லை, இது அவரது 61 ஆண்டுகால வாழ்க்கையில் அவர் தவறவிட்ட ஒரே தேர்தல். 1989 இல் மீண்டும் தேர்தல் அரசியலுக்குத் திரும்பினார், 1991ல் மீண்டும் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு 1991 தேர்தல் நடைபெற்றது. உணர்ச்சிப்பூர்வமான பிரச்சாரத்தை காங்கிரஸ் அதிமுக கூட்டணி முன்வைத்தது. ராஜீவ் கொலையில் திமுக மீது இவர்கள் குற்றம்சாட்டி பிரச்சாரம் செய்தனர். திமுகவை விடுதலைப் புலிகள் ஆதரவு கட்சி என்று ஜெயலலிதா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் முத்திரை குத்தி வசைமாரி பொழிந்து பிரச்சாரம் செய்தனர். திமுக படுதோல்வி கண்ட தேர்தல் இது. ஆனாலும், கருணாநிதி தனது தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் மட்டுமே திமுக சார்பில் வென்ற ஒரே வேட்பாளர் என்றால் நிலைமையை பார்த்துக்கொள்ளுங்கள். இந்த பெரும் புயலிலும் கட்டுமரமாக கரைசேர்ந்தார் கலைஞர். பின்னர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் 1996, 2001, 2006 ஆகிய மூன்று தேர்தல்களில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். 2011ல் திருவாரூர் தொகுதிக்கு மாறி 2016ல் 68,366 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்துக் கொண்டார். இதுவே கருணாநிதி மறையும் முன்பு எதிர்கொண்ட அவரது கடைசி தேர்தல்.

இந்தியாவிலேயே அதிக காலம் கட்சித் தலைவராக இருந்தவர் என்ற சாதனையையும் கருணாநிதி படைத்துள்ளார். 1969 முதல் 2018 ஆகஸ்ட் 7 வரை அவர் இறக்கும் வரை 49 ஆண்டுகள் திமுகவை வழிநடத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+