சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா அப்பீல் செய்தால் தி.மு.க. ஆதரவு: கருணாநிதி
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தால் தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார். இருப்பினும் குமாரசாமியின் தீர்ப்பில் கூட்டல் கணக்குகளில் பிழை இருக்கிறது.. சில அம்சங்கள் விடுபட்டுப் போயிருக்கிறது என்று தி.மு.க. உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுமே குற்றம்சாட்டி வருகின்றன.

அத்துடன் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவும் இந்த பிழைகளை சுட்டிக்காட்டி இதனடிப்படையில் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை வாங்குவது குறித்து ஆலோசிப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தால் தி.மு.க. அதற்கு ஆதரவு அளிக்கும் என்று கூறினார்.
தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகனும் ஒரு தரப்பாக மனுத்தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications