மோடி விழாவில் ராஜபக்சேவா?: காங்கிரஸ் கதியை பாஜக உணர வேண்டும்- கருணாநிதி
சென்னை: நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ராஜபக்சேவை அழைத்ததை எதிர்த்து போராட்டங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் இன்று வெளியிட்ட அறிக்கை:
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதும், அவர் அந்த விழாவில் கலந்து கொள்ளவிருப்பதும் தமிழ் நாட்டு மக்களாலும், உலகத் தமிழர்களாலும் எவ்வகையிலும் ஏற்று, வரவேற்கப்பட இயலாத ஒன்றாகும்.
ஏற்கனவே இருந்த மத்திய காங்கிரஸ் அரசிடம் தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், சர்வதேச தமிழ் அமைப்புகளின் சார்பாகவும் பல முறை இலங்கை அரசின் தமிழ் மக்களுக்கு முற்றிலும் எதிரான நடைமுறைகள் குறித்துப் பல முறை எடுத்துச் சொல்லியும், எச்சரிக்கை செய்தும், மத்திய காங்கிரஸ் அரசு அதைக் கிஞ்சிற்றும் காதிலே போட்டுக் கொள்ளாமல், இலங்கையை நட்பு நாடு என்றே தொடர்ந்து கூறி வந்ததின் காரணமாக ஏற்பட்ட எதிர்மறை விளைவினை அனைவரும் அறிவர்.
தமிழின உணர்வு சம்பந்தமான இந்த உண்மையை புதிதாகப் பொறுப்பேற்கும் பா.ஜ.க. அரசு தொடக்க நிலையிலேயே உணர்ந்து கொள்ள முன் வர வேண்டும் என விரும்புகிறேன்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிக்க வேண்டுமென்று ஒரு காலத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் பேரவையிலே தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியவர்களே, தற்போது நல்லவர்கள் போலவோ அல்லது தம்மைத் திருத்திக் கொண்டவர்கள் போலவோ, ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு தங்களின் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காரசாரமாக விடுத்துள்ள அறிக்கையைப் பார்க்கும்போது, இதே முதலமைச்சர் தான் தமிழகச் சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியவர் என்பது மறந்து விடக் கூடியதல்ல.
நரேந்திர மோடி அவர்கள் இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்க விருக்கும் அந்த நிகழ்ச்சியில், இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்து, தமிழ் இன அழிப்பில் தீவிரமாக இறங்கிய - தமது குடிமக்கள் மீதே போர் தொடுத்த - மனித உரிமைகளைச் சிறிதும் மதிக்காத ஒருவர் இடம் பெற வேண்டுமா என்பதை மத்திய அரசு மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து சிந்தித்து, அந்த முயற்சியைக் கை விட வேண்டுகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
குதிரை பேரமா? 2009 கலைஞர் பாலிடிக்ஸ்.. 2011ல் காப்பி அடித்த ஜெ.,! அப்படியே ஃபாலோ செய்யும் தவெக விஜய் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே!












Click it and Unblock the Notifications