தொடர்ந்து பின்னடைவு... தீவிர மருத்துவ கண்காணிப்பில் கருணாநிதி

கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவாக இருப்பதால் அவரது நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கருணாநிதி உடல்நிலையில் தொடரும் பின்னடைவு- வீடியோ

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலையளிக்கும் விதத்தில் உள்ளதால் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

    கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் குறைந்ததால் அவர் கடந்த 28-ஆம் தேதி நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றமும் பின்னடைவும் மாறி மாறி இருக்கிறது.

    நேற்று 10ஆம் நாளாக சிகிச்சை பெற்று வரும் கருணாநிதிக்கு காலை முதல் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் கூறின. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் மாலை வேளையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

     குவிந்த தொண்டர்கள்

    குவிந்த தொண்டர்கள்

    கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து காவேரி மருத்துவமனை முன்பு தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் எழுந்து வா தலைவா என்று கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

     குவிந்த தொண்டர்கள்

    குவிந்த தொண்டர்கள்

    கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து காவேரி மருத்துவமனை முன்பு தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் எழுந்து வா தலைவா என்று கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

     முக்கிய அறிக்கை

    முக்கிய அறிக்கை

    இன்று கருணாநிதி உடல்நிலை குறித்து முக்கிய அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சென்னை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டனர்.

     தகவல்கள்

    தகவல்கள்

    கருணாநிதியின் ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு ஆகியவை சீராக இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

     மீண்டு வருவார்

    மீண்டு வருவார்

    கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்து விட்டு செல்லும் முக்கிய பிரமுகர்களும் தொண்டர்கள் கலக்கமடைய வேண்டாம் என்றும் கருணாநிதி மீண்டு வருவார் என்றும் இதுபோல் எத்தனையோ முறை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் புத்துணர்ச்சியுடன் எழுந்து வந்துள்ளார் என்றும் கூறுகின்றனர். இவர்களின் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் என்று தொண்டர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+